Monday, August 1, 2011

அருளா? பொருளா?


இறைவா...!
நீ படைத்த உலகில்
வாழ்க்கைஎனும் படகில்
என் கண்களும், நெஞ்சமும்
தவித்திடும் தவிப்பு
இறைவன் மிகப் பெரியவன்..!

உலகில் யாரும் செய்வதில்லை
பொருள் இல்லாமல் சேவை!
வாழ்க்கையை வாழவே
பொருள் என்றும் தேவை

பசிவந்து வயிற்றைக் கிள்ள
அழுகை வந்தது!
இரக்கமில்லா மனிதர் மீது
வெறுப்பு வந்தது
அருளா? பொருளா?

வசதியான கண்கள் எல்லாம்
கனவு காணும் போது
கடுமையாய் உழைத்தும்
ஏழை கண்ணில் சோகம்
மலர் பறிக்க மரத்தையிங்கு
வெட்டலாகுமா?
ஏழை வயிற்றில் அடித்துப்
பிழைக்கலாகுமா?
அருளா? பொருளா?

இல்லாதவன் அழுகை கூட
அர்த்தமுள்ளதாகும்
இருப்பவன் அழுகையோ
குடிகெடுக்க கூடும்
இறைவன் வந்து ஏழையாக
வாழ வேண்டுமே!
வறுமை என்றால் என்னவென்று
உணர வேண்டுமே!
அருளா? பொருளா?
-விஷ்ணுதாசன்.

No comments:

Post a Comment