Monday, August 1, 2011

வினைத்திட்பம்!


முயற்சித் திருவினையைக் கண்டீரோ!
பயிற்சியின் உயர்ச்சியைக் கண்டீரோ!
அயர்ச்சியில்லாக் கால மயிலின்
வியப்புடைத் தோகை விரிப்பின்
நயம் கண்டீரோ! ஆனந்தம்!
வாய்ப்பின் அற்புதம் பரமானந்தம்!
ஆனந்தம்! அங்கீகாரம் ஆனந்தம்!
ஆனந்தம் சங்காரமின்றி வழங்கும்
அனந்த ஊக்கம் ஆனந்தம்!
ஓங்கார பலத்தில் ஓசையின்றி
ஓங்கிடும் வினைத் திட்பம்
சிங்காரமாய் அரங்கேறல் ஆனந்தம்!
நிலையூன்றும் சுயநலச் சுழிகள்,
அலையிழந்து சிக்கும் மனிதன்,
நிலையாகப் போராடி எட்டும்
கலையான வெற்றி கண்டீரோ!
விலையற்ற இலக்கு எட்டும்
நிலை வாய்ப்பு! ஆனந்தம்!.
உயிரோட்ட வாழ்வில் நிதம்
போராட்டம் பல விதம்.
தட்டுங்கள் திறக்கப்படும் வேதம்.
எட்டுங்கள் வாய்ப்பிற்கு நிதம்!
தேரோட்ட இலக்கின் நோக்கு
நீராட்டும் வாய்ப்பு வியப்பு!
பற்றும் வீரியக் கனவு
இற்றிடாது சிந்து பாடும்!
வற்றிடாக் கடலாய் உந்தும்!
உற்ற காலத்துத் திருவினையால்
வெற்றி காணலாம் வினைமனம்.
-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், 

No comments:

Post a Comment