Tuesday, July 12, 2011

மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை



கடந்த 10 ஆண்டுகளாக காயம் அடைந்த இதயத்திசுக்களுக்கு பதிலாக வேறு திசுக்களை பொருத்த முடியுமா என்பது குறித்து அவர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தற்போது புதிய திருப்பு முனை ஏற்பட்டு உள்ளது. பென்சில்வேனியா பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆர்.என்.ஏவை மாற்றுவதன் மூலம் இதயம் அல்லாத இதரப் பகுதி செல்களை இதயச் செல்களாக மாற்ற முடியும் என கண்டறிந்து உள்ளனர்.
ஆர்.என்.ஏ என்பது ரிபோநியூக்ளிக் ஆசிட் என்பதன் சுருக்கம் ஆகும். வாழும் திசுக்களில் இது உள்ளது. டி.என்.ஏ மரபணுவில் இருந்து உத்தரவுகளை எடுத்துச் சென்று புரத முறையை கட்டுப்படுத்தும் அமைப்பை ஆர்.என்.ஏ மேற்கொள்கிறது.
எம்.ஆர்.என்.ஏ எனப்படும் மெசஞ்சர் ஆர்.என்.ஏ மாற்றம் மூலம் ஆஸ்ட்ரோசைட் எனப்படும் நட்சத்திர வடிவ மூளை செல்களையும், பைப்ரோபிளாஸ்ட் எனப்படும் தோல் திசுக்களையும் இதய திசுக்களாக நிபுணர்கள் மாற்றம் செய்து உள்ளனர்.
பழுதடைந்த இதயத் திசுக்களுக்கு பதில் மூளைத் திசுக்களையும் மற்ற திசுக்களையும் பயன்படுத்தலாம் என்பதால் நவீன மருத்துவ சிகிச்சை நிலையை பெற முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment