நியூயார்க் கண்காட்சியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நான்கு வயது ஓவியக்கலைஞர் |
நான்கு வயது சிறுமி அலிடா ஆண்ட்ரே வரைந்த கண்ணைக்கவரும் ஓவியங்கள் நியூயார்க் கண்காட்சியை முதன் முறையாக அலங்கரிக்கத் துவங்கி உள்ளன. மன்ஹட்டனில் உள்ள அகோரா கேலரியில் சிறுமி அலிடாவின் 9 ஓவியங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தக் கண்காட்சியில் இதுவரை இடம் பெற்ற மிக இளவயது ஓவியக் கலைஞராக அலிடா உள்ளார். அவரது ஓவியங்கள் அனைத்தும் தலா 6 ஆயிரம் டொலர் மதிப்பில் விற்பனை ஆகி உள்ளன. இந்த கண்காட்சி ஓவிய விற்பனை மூலம் அலிடாவுக்கு 9 ஆயிரத்து 900 டொலர் கிடைத்துள்ளது. கேலரியின் இயக்குநர் ஏங்கலா டி பெலோ கூறுகையில்,"நான்கு வயது சிறுமி ஓவியரான அலிடா தனக்கென்று பிரத்யேக பாணியில் ஓவியம் வரைவதில் கைதேர்ந்து விட்டார்" என புகழாரம் சூட்டினார். இந்த சிறுமியின் பெற்றோர் நிக்கா கலாஷ்னிகோவா மற்றும் மைக்கேல் ஆண்ட்ரேவும் ஓவியக் கலைஞர்கள் ஆவார்கள். தங்கள் மகளின் ஓவியத்தில் தீங்கு இல்லாத வெகுளித்தனம் வெளிப்படுவதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். |
No comments:
Post a Comment