Tuesday, May 31, 2011

புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து

புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து

இபு ப்ரோபென் போன்ற வலி நிவாரண மருந்துகளுக்கும், புற்றுநோய் புரதத்திற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இத்தகைய வலி நிவாரண மருந்துகள் மூலம் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க முடியும் என தெரியவந்துள்ளது. இந்த புது கண்டுபிடிப்பு ப்ராஸ்டேட் மற்றும் இதரப் புற்றுநோய்களுக்கு தீர்வு காண உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இபு ப்ரோபென் வலி நிவாரணி போதை மருந்து தூண்டுதல் வகை சாராத ப்ரோபென் மருந்து வகையைச் சார்ந்தது ஆகும். புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தடுக்கும் வலி நிவாரணி குறித்து கெமிக்கல் கொம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணத்திற்கு பயன்படும் ப்ரோபென் வகை மருந்துகள் உடலில் ஒரே வழியில் செயல்படுகின்றன. இவை AMACR என்ற புரதத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்த புரதம் பல புற்றுநோய்களில் தீவிரமாக செயல்படுகின்றன.
இந்த புரதம் அபரிதமாவதை கட்டுப்படுத்துவதில் வலி நிவாரண ப்ரோபேன் வகை மருந்துகள் வெகுவாக உதவுகின்றன. வலி நிவாரணிகளான இந்த வகை மருந்துகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க உதவுவதை எங்களது சோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன என பாத் பல்கலைகழக தலைமை ஆய்வாளர் டொக்டர் மாத்யூ லாயிட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment