Tuesday, May 31, 2011

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -114

பாரடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்திலும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெளிந்த ஞானியே

பூமியில் அடங்கியுள்ள யாவிலும் ஆகாயமாக விரிந்துள்ள அனைத்திலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிரந்த பரம்பொருளே சோதியாகவுள்ளது. அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபித்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும்  மெய்ப்பொருளாக விளங்கி நிற்கின்றது. அதனை அறிந்து தன் சீவனிலேயே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே !!!!

http://sivavakiyar.blogspot.com/ நண்பரே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள் மனதிருக்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக ...மலர வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment