Sunday, November 17, 2024

"ஒரே ராகம்" ஆனந்தபைரவி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்

 ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது. பண்டைய தமிழிசைப் பண்களில் திருவிசைப்பா என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.

  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
  • இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.

No comments:

Post a Comment