Monday, May 27, 2024

ஒரே ராகம்" மாயா மாளவ கௌளை ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்

மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15  வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் இருந்தால் நமக்குக் கிடைப்பது விதவிதமான விருந்துகள் தான்.அப்படி ஒரு ராகம் தான் மாயா மாளவ கௌளை.இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்.கர்நாடக சங்கீதத்தில் ரி,க,ம,த,நி ஆகிய ஸ்வரங்கள் இரண்டிரண்டு இருக்கும் உ-ம் சின்ன ரி(ரி1) பெரிய ரி (ரி2). 'ஸ' வும் 'ப' வும் ஆதார ஸ்ருதிகள் ஆகவே ஒன்றுதான்.கீ போர்டில் ஒரு வெள்ளைக் கட்டைக்கு முன் மேலே இருக்கும் கருப்புக் கட்டை சின்ன ஸ்வரம்.('ம' மட்டும் விதிவிலக்கு). ஒரு ராகத்தில் ஏதாவது ஒரு ஸ்வரம்( சின்னதோ பெரியதோ) மட்டுமே வரும்.(இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன).

இவ்வாறு ஸ்வரங்களின் விதவிதமானச சேர்க்கையில் (உ-ம் ஸ ரி1க2 ம1 ப த1நி2ஸ் -மாயா மாளவ கௌளை.ஸ ரி2க2ம2ப த2 நி2 ஸ்-கல்யாணி) 72 வகையான ராகங்கள் கிடைக்கின்றன.இவை மேளகர்த்தா ராகங்கள் என அழைக்கப் படுகின்றன.ஏழு சுரங்களும் வருவதால் சம்பூர்ண ராகம் என்றும் அழைக்கப்படும்

திரை இசைபாடல்கள்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா(ஆலயமணி)

அம்மம்மா கேளடி தோழி(கருப்புப் பணம்)

பல்லாக்கு வாங்கப் போனேன்(பணக்காரக் குடும்பம்)

நாம் ஒருவரை ஒருவர்(குமரிக் கோட்டம்)

அந்தப்புரத்தில் ஒரு மகாராணி(தீபம்)

அந்தி வரும் நேரம்(முந்தானை முடிச்சு)

மதுரை மரிக்கொழுந்து வாசம்(எங்க ஊர் பாட்டுக்காரன்)

மாரியம்மா மாரியம்மா( கரகாட்டக்காரன்)

ஆறடிச் சுவருதான் ஆசையை(இது நம்ம பூமி)

நன்றி சொல்லவோ என் மன்னவா(உடன் பிறப்பு)

காதல் கவிதைகள் படித்திடும்(கோபுர வாசலிலே)

இங்கே நான் கண்டேன் அனார்கலி(சாதனை)

கலைமகள் அலைமகள்(வெள்ளி ரதம்)

கடலுக்கு நான் செய்யும்(பூவெல்லாம் கேட்டுப் பார்)

மானம் இடி இடிக்க(உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்)

உயிரே உயிரே உருகாதே(ஒருவர் வாழும் ஆலயம்)

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். 
Thanks https://eegarai.darkbb.com/,https://simulationpadaippugal.blogspot.com/

No comments:

Post a Comment