Monday, October 30, 2023

"ஒரே ராகம்" கல்யாணி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள் (கல்யாணி ராகம் கேட்டால் இதய நோய் வராதம்.)

கல்யாணி ராகம்


இது ஒரு தமிழிசை பண் ஆகும். பின் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் இதன் பங்கு மிக முக்கியமாக அமைந்தது. பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava ) உண்டு என்பார்கள். கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள். பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் குரல் நேர்த்தி “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது.

ஆரோகணம் : ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் : ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

நிதிசால சுகமா' ,'பங்கஜ லோசனா' போன்ற கீர்த்தனைகள் உள்ளன.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்:

அம்மா என்றழைக்காத - மன்னன்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி
காற்றினிலே வரும் கீதம் - ஒரு நாள் ஒரு கனவு
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
சரணம் பவ கருணாமயி - சேது
என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை
மஞ்சள் வெயில் - நண்டு
நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம்
நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
நிற்பதுவே நடப்பதுவே - பாரதி
ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன்
தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன்
மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்


பாடல்- 01.என்னருமை காதலிக்கு. (00:01)
பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.
பாடல்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை- T.G.லிங்கப்பா.
படம்- எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
வருடம்- 1960.
படம் வெளியான நாள்- 01-07-1960.

பாடல்- 02.துள்ளித் திரிந்த பெண். (03:33)
பாடியவர்- P.B.சீனிவாஸ்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- காத்திருந்த கண்கள்.
வருடம்- 1962.
படம் வெளியான நாள்- 29-08-1962.

பாடல்- 03.உள்ளம் ரெண்டும் ஒன்று. (06:48)
பாடியவர்கள்- C.S.ஜெயராமன் & ஜிக்கி.
பாடல்- தஞ்சை ராமையாதாஸ்.
இசை- G.ராமனாதன்.
படம்- புதுமை பித்தன்.
வருடம்- 1957.
படம் வெளியான நாள்- 02-08-1957.

பாடல்- 04.வெண்ணிலா வானில். (10:16)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- S.M.சுப்பையா நாயுடு.
படம்- மன்னிப்பு.
வருடம்- 1969.
படம் வெளியான நாள்- 28-11-1969.

பாடல்- 05.இந்த மன்றத்தில் (சோகம்) (13:38)
பாடியவர்கள்- P.B.சீனிவாஸ் & S.ஜானகி.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- போலீஸ்காரன் மகள்.
வருடம்- 1962.
படம் வெளியான நாள்- 07-09-1962.

பாடல்- 06.மன்னவன் வந்தானடி. (16:37)
பாடியவர்கள்- P.சுசீலா & குழுவினர்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
படம்- திருவருட்செல்வர்.
வருடம்-படம் வெளியான நாள்- 28-07-1967. 1967.


பாடல்- 07.வெட்கமாய் இருக்குதடி. (23:43)
பாடியவர்கள்- P.லீலா & சூலமங்கலம் ராஜலட்சுமி.
பாடல்- சுத்தானந்த பாரதி.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- பார் மகளே பார்.
வருடம்- 1963.
படம் வெளியான நாள்- 11-11-1963.

பாடல்- 08.முகத்தில் முகம் பார்க்கலாம். (30:43)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.லீலா.
பாடல்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- தங்கபதுமை.
வருடம்- 1958.
படம் வெளியான நாள்- 10-01-1959.

பாடல்- 09.சிந்தனை செய் மனமே. (33:56)
பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.
பாடல்- K.D.சந்தானம்.
இசை- G.ராமனாதன்‌.
படம்- அம்பிகாபதி.
வருடம்- 1957.
படம் வெளியான நாள்- 22-10-1957.

பாடல்- 10.துணிந்தபின் மனமே. (37:20)
பாடியவர்- கண்டசாலா.
பாடல்- உடுமலை நாராயண கவி.
இசை- C.R.சுப்புராமன்.
படம்- தேவதாஸ்.
வருடம்- 1952.
படம் வெளியான நாள்- 11-09-1953.

Thanks JE Music Academy Nagercoil

No comments:

Post a Comment