Wednesday, March 15, 2023

பாலியல் உறவுகளும் மீகற்பனையும்(fantasy)-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்


சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டீஷ் தொலைக்காட்சியில் ஒரு பியர் விளம்பரம் வந்தது. அதில் ஒரு பெண் ஓர் ஓடை அருகே நடந்துகொண்டிருப்பாள். அங்கு ஒரு தவளையைப் பார்ப்பாள். அதை எடுத்து முத்தம் கொடுப்பாள். அது ஓர் அழகிய இளைஞனாக மாறிவிடும். ஆனால் கதை அங்கு முடியவில்லை. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை பெரும் மோகம் கொண்டு காண்பான். அவளை இழுத்து அணைத்து முத்தமிடுவான். அவள் ஒரு பியர் குப்பி ஆகிவிடுவாள். அதை அவன் தன் வெற்றியின் சின்னமாகக் கையில் வைத்திருப்பான்.
பெண்ணுக்குத் தன் அன்பும் அரவணைப்பும் ஒரு தவளையை ஆணாக்கின. ஆனால் ஓர் ஆணின் அன்பும் அரவணைப்பும் ஒரு பெண்ணை போதை வஸ்தாக்கிவிட்டன. வெறும் அவனுடைய விருப்பத்தின் பொருளாக மாற்றிவிட்டன. இந்த வேறுபாடு பாலியல் ரீதியிலான உறவு என்பதே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண் தவளையுடன் இருக்கலாம் அல்லது ஓர் ஆண் பியர் குப்பியுடன் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து இருப்பது சாத்தியமில்லை. அல்லது ஒரு தவளை ஒரு பியர் குப்பியை அணைப்பது கூட சாத்தியப்படலாம்.
இது மீகற்பனை என்பதன் மீதான கவனத்தைக் குவிக்கிறது. அதாவது பெண் தன் மீகற்பனையில் தவளையை ஆணாக எண்ணுகிறாள்; ஆண் பெண்ணை பியர் குப்பியாக எண்ணுகிறான். எனவே ஒவ்வொரு ஆண் அல்லது பெண் தன்னிலையும் தங்களது மீகற்பனைகளின் மூலமாக உருவாக்கப்படும் தன்னிலைகள் குறித்து எடுத்துச் சொல்வதாக படைப்பாக்கங்கள் உருவாக வேண்டியிருக்கின்றன.
இதன் மூலம் உண்மை மீகற்பனையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் மீகற்பனை செப்பனிடப்படாத உண்மையிலிருந்து நம்மைக் காக்கிறது என்று பொருள். எனவே மீகற்பனை உண்மையின் பக்கம் இருக்கிறது. அதுதான் உண்மையை ஏற்கும்படியாகவும் செய்கிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.

 Thanks ;Mubeen Sadhika

No comments:

Post a Comment