Saturday, November 19, 2022

தொல்காப்பியம்

 தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.


தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப் பெயராயிற்று என மற்றொரு சாராரும் மொழிவர் “தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று பாயிர் ஆசிரியர் பனம்பாரனார் கூறியமையால் ஆசிரியரின் இயற்பெயரே அஃது என்றும், தோற்றி என்பதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டது. என்பாராய் நூலின் பெயரே நூலாசிரியர்க்கு ஆயிற்று என்றும் வெவ்வேறு நோக்கில் விளக்கம் காண்பர் நூலாசிரியர் பெயர்க்கு முன்னுரிமை தருவோர் காப்பியக்குடியில் பிறந்தமையால் தொல்காப்பியன் எனப்பட்டார் எனக் காரணம் கூறுவர். இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் வரும் ‘காப்பியத் தொல்குடி” என்னும் தொகையைச் சுட்டுவா். வடநாட்டில் விருத்தக்காப்பியக்குடி’ என்ற குடி உண்டு என்றும். அதன் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம் என்றும் கருதுவோர் உளர். தமிழகத்துள் சிறந்தோரை வடபுலத்தாராக்கிக் காட்டுவதில் முனைப்புடைய இலர்.

தம் கூற்றிற்கு அரணாக நச்சினார்க்கினியர் கூறும் கதை அமைந்துள்ளது. அவர் சமதக்கினியின் மகனான திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என்றும், அகத்தியர் தென்னாடு வரும்போது பதினெண் வேளிரோடு தம் மாணவராகிய திரண துமாக்கினியாரையும் அழைத்து வந்தார் என்றும் குறிப்பிடுவார். சமதக்கினியின் மக்கள் பரசுராமன் முதலிய நால்வர் என்றும், அவருள் யார்க்கும் திரணதூமாக்கினி என்ற பெயா இல்லை என்றும் இராமாயணக் கதையால் அறிகிறோம். தொல்காப்பியர் வட நாட்டினின்றும் வந்தவர் என்பதை இரா இராகவஜயங்கார் மு இராகவ ஐயங்கார், & வெள்ளைவாரணர் போன்றோர் தக்க காரணங்களோடு மறுத்துள்ளனர். தொன்மையான இலக்கணக் கருத்துக்களைக் காப்பதால் தொல்காப்பியம் என நூலுக்குப் பெயர் வந்தது எனவும், அதுவே நூலாசிரியர்க்கும் பெயராய் அமைந்தது என்றும் கூறுதல் பொருத்தமாக உள்ளது. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்ற கருத்தும் பிற்கால இலக்கணப் பாயிரங்களில் காணப்படுகிறது.

சிறப்பும் சீர்மையும்

1.தொல்காப்பியம் கிடைக்கும் தமிழ் நூல்களில் முதல் நூல். வேத காலத்தது என்று குறிப்பிடும் அளவிற்கு மிகப் பழமையானது. வடமொழிப் பாணினிக்கும் முற்பட்டது; அதனால் பாணினிக்கும் வழிகாட்டியாய் அமைந்தது. உலகமொழி இலக்கணங்களின் முன்னோடி யாகப் பாணினியை மேளாட்டார் குறிப்பிடுவது தவறு தொல்காப்பியமே உலகமொழி இலக்கணங்கள் அனைத்திற்கும் முன்னோடி அது தமிழின் உயிர் நாடி.

2.ஒலிகளின் பிறப்பு, வகைமை சொற்களில் அவை நிற்கும் இடம் ஆகியவை பற்றிய தொல்காப்பியரின் விளக்கங்கள். உலக மொழிகளின் ஒலிகளை ஆயும் ஒலியியலாரை வியப்பில் ஆழ்த்துவன; அவர்களால் பெரிதும் பாராட்டப்படுவன.

 “எழுத்ததிகாரப் பிறப்பியல் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது மட்டுமின்றிப் பிறமொழி ஒலிகளையும் எழுதிக்காட்டும் ஏற்றம் சான்றது. வே மாணிக்க நாயக்கர்

“இலக்கண உலகின் ஏகச் சக்கரவர்த்தி என்று கூறப்படும் பாணினி என்ற வடமொழி ஆசிரியரும், இவ்வளவு விரிவாக (ஒலியை) ஆராய்ந்த திலலை” – எஸ் வையாபுரிப்பிள்ளை

3.வேதங்கள் எழுதாக்கிளவி எனப்பட்டன. வடமொழி இதிகாசங்கள் வாய்மொழியாக வழங்கப்பட்டன. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தான் வடமொழி எழுத்துக்கள் வரிவடிவம் பெற்று வடமொழி இலக்கண இலக்கியங்கள் ஏட்டில் ஏறின வேத காலத்தது எனக் கருதப்படும் பழமை வாய்ந்த (சி.மு 1500) தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. உலகில் வரிவடிவம் கூறும் ஒரே பழைய இலக்கணம், தொல்காப்பியமே.

4.உலக மொழிகளின் மாபிலக்கணங்கள் பேச்சு மொழியைப் புறக் கணிக்கும். மொழியியலாரோ பேச்சு மொழிக்கு முன்னுரிமை தருவர். தொல்காப்பியம் பேச்சுமொழி, இலக்கியமொழி ஆகிய இரு வகை வழக்கிளையும் ஆராய்ந்து கூறும். பேச்சுமொழிகளையும், வட்டார வழக்குகளையும் (திசைச்சொல் ஆராய்ந்து இலக்கணம் வகுக்கும் முறைமையை முதன்முதலில் கையாண்ட தொல்காப்பியர் இவ்வகையில் இன்றைய மொழியியலார்க்கும் வழிகாட்டி ஆவார்.

5.தொல்காப்பியர் உலகப்பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பாற்பாகுபாடு செய்தமை, அறிவியற் கண்ணோட்ட முடையது. உலகின், பிறமொழியாளர் அறியாதது. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையே ஏற்படும் குழப்பத்தைப் போக்கியது. அதனால் தமிழ்த் தொடர்கள் தெளிவும் விளக்கமும் பெறுகின்றன.

6.வெளிப்பட நின்று பொருளுணர்த்தும் தொடரமைப்புக்கள் மறைந்து நின்ற சொற்களால் பொருள் உணர்ந்தற்கேதுவாகிய எச்சவகைகள், கூட்டுச் சொற்களாகிய தொகைச்சொற்கள் (Compound words) பெயரும் வினையுமாகிய சொற்களின் பல்வேறு வகைகள். வேற்றுமைத் தொடர்கள், உரியாலும் இடையாலும் ஏற்படும் சொல்லாக்கங்கள் எனப் பலவாகிய மொழி நுட்பக் கருத்துக்களைத் தொல்காப்பியம் விளக்கி அமைகிறது. இன்றைய மொழியியல் அறிஞரும் போற்றும் நுண்மைகள் பல தொல்காப்பியத்தில் ஒளிர்கின்றன.

7.பிற்காலத்தில் தோன்றிய நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற மொழி இலக்கணங்கட்கும். இறையனார் களவியல் நம்பியகப் பொருள். புறப்பொருள் வெண்பாமாலை முதலிய பொருள் இலக்கணங்கட்கும், தண்டியலங்காரம். மாறனலங்காரம் போன்ற அணியிலக்கணங்கட்கும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை: யாப்பதிகாரம் முதலிய யாப்பிலக்கண நூல்கட்கும். இலக்கிய வகைமைகளை வரையறுக்கும் பாட்டியல் நூல்களுக்கும் தொல்காப்பியமே வழிகாட்டி இலக்கணத் துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் புதுப்புது இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன் தொல்காப்பியம் பெரிதும் உதவிற்று. ஆற்றுப்படைப் பாடல்கள். மடல் இலக்கியங்கள். கோவை இலக்கியங்கள், பிள்ளைத்தமிழ் காதல் இலக்கியங்கள். தூது இலக் கியங்கள் களவழி நாற்பது தேரோர் களவழி பள்ளு (ஏரோர் களவழி முதலான பல இலக்கியங்கள் தொல்காப்பிய அகப்புறத் துறைகளின் தாக்கத்தால் அரும்பின. இக்கால இலக்கியங்களிலும் தொல்காப்பியக் கருத்துக்களும் வழி காட்டு நெறிகளும் ஊடுருவியுள்ளன. காலந்தோறும் தோன்றுகிற எல்லாவகை இலக்கண இலக்கியங்களும் தொல்காப்பிய ஆகாயை அடியொற்றித்தான் நடக்கும். இக்கருத்தில்,

“கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்

தோமின் நுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையில் தமிழறிந் தோற்குக் கடனே“

எனப் பல்காப்பியளார் பாராட்டுவார்.

8.வாழ்க்கை முறை தொழில் மக்களின் பண்புநலன்கள் பண்பாடு நாகரிகம் பொருள்வளம், சமூகநிலை கடவுட்கொள்கை மரபு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கூறுவதால் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வரலாற்று நூலாகவும், நிலப்பாகுபாடு தமிழ் நாட்டெல்லை. மூவேந்தர்கள். போர்முறை ஆட்சிமுறை முதலிய வறறைக் குறிப்பிட லால் அரசியல் வரலாற்று நூலாகவும், தன்கால இலக்கண இலக்கியக் கருத்துக்களை வகுத்துரைப்பதோடு முன்னிலவிய இலக்கண இலக்கியக் கருத்துக்கலளயும் குறிப்பிட்டுச் சுட்டலால் இலக்கிய – இலக்கண வரலாற்று நூலாகவும் தொல்காப்பியம் விளங்குகிறது. தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் முதன்மை நாகரிக முன்னோடி நூல் தொல்காப்பியம்.

9.உலகின் பிறமொழி இலக்கணம் எதுவும் பொருளாராய்ச்சியை மேது கொண்டதில்லை. மொழி இலக்கணத்திற்கு நிகராகப் பொருளிலக் கணம் கூறும் உலகின் ஒரே இலக்கணம் தொல்காப்பியம். இக்கால ஆய்வாளர்கள் பொருளதிகாரத்தை நுவல்பொருள் இலக்கணம் என்றும் பானியற் கோட்டாடு என்றும் இலக்கியக் கொள்கை என்றும் இயம்புவர்.

10. தொல்காப்பியம் மொழியிலக்கணம் மட்டும் மொழியாமல் பொருண்மை இலக்கணமும் (Semantics)  பேசுகிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதோடு உரியியலில் சொற்பொருள் விளக் கமும் உரைக்கிறார் சொல்லின் பொருள் மரபு வழியே வருவது எனவே “மரபுநிலை திரியிள் பிறிது பிறிதாகும்” என்பார். தொல்காப்பியர்

கடிசொல் இல்லை காலத்துப் படினே

என்று கூறிப் புதிய புதிய சொற்கள் தோன்றுதலையும் தொல்காப்பியர் வரவேற்கிறார்.

11.பிற்கால நிகண்டுகள் தோன்றத் தொல்காப்பிய உரியியலே வழி காட்டி, அகராதியின் முன்னோடி அது.

12. உலகில் முதன்முதலில் மொழிபெயர்ப்புப் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் தொல்காப்பியம் ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழியின் ஒவி வரிவடிவத்திற்குக் கொண்டு செல்லும் உத்தியினைத் (Translitaration) தொல்காப்பியர், வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. என்ற நூற்பாவில் குறிப்பிடுவார் சொல்லுக்குச்சொல் பொருள் பெயர்த்தலை மொழி பெயர்த்தல் என்றும் விளங்கும் வகையில் கருத்துப் பெயர்த்தலை அதற்படயாத்தல் என்றும் வகைப்படுத்திக் கூறியுள்ள திறம் பெரிதும் போற்றத்தக்கது.

13. அகப்பொருள் மாந்தரின் பெயர் கூறக்கூடாது என்ற தொல்காப்பியரின் விதி இலக்கிய உணர்வுகளைச் சமுதாயத்திற்குப் பொதுவாக்கமுனையும். இக்காலத்தில் நடப்புச் செய்திகளையோ, புனைவுகளையோ கதையாகக் கூறுங்கால் கற்பளையாகப் பெயர்களைப் படைத்து மொழிவதும் அக்காலத்து அசுமாந்தர் குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாததும் இலக்கியம் ஒருவருக்காகவன்றி எல்லோருக்கும் பொதுவாக உரியது” என்பதில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன.

14.உணர்வுகளைப் பொதுலான மெய்ப்பாடுகள் அகப்பொருட்கு மட்டுமே உரிய மெய்ப்பாடுகள் என வேறுபடுத்தி விளக்கி இருக்கும் திறம், இன்றைய உளவியலாளரையும் திகைப்புறச் செய்யும் உளவியல் மட்டுமின்றி உயிர்களின் வகைப்பாடு, ஓரறிவுயிர்களைப் புல்வகை, மரவகை எனப் பகுத்து விளக்கியமை போன்றன, அறிவியற்றுறைக்குச் சவால்களாக அமைவன.

15. “பாணினியின் தெளிவும் பதஞ்சலியின் திட்பமும் அரித்தாட்டிலின் தெளிவும். அவையனைத்திலும் இல்லா வளமும் வளப்பும் அளவை நூன் முறையமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும். நிரம்பியமைந்தது தொல்காப்பியம்” நாவலர் சோமசுந்தர பாரதியார்.

16.இன்றைய அறிஞர்கள் இலக்கணத்தினை வண்ணனை முறையியல் (Descriptive) வரைவியல் (Perscriptive) வரலாற்றியல் (Histo-rical ஒப்பியல் (Comparative) எனப் பலவாறு பகுத்துரைப்பர் அப்பகுப்புத் திறங்கள் அனைத்தும் ஆங்காங்கே பொதுளி நிற்பத் தொல்காப்பியா தம் நூலினை அமைத்துள்ள அருமைப்பாடு பெருமைப்பட வைக்கிறது.

17. இலக்கணமாக மொழி நூலாக ஆராய்ச்சிக் கருவி நூலாக அமைந்த தொல்காப்பியம், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர். நச்சினார்க்கிளியர், தெய்வச்சிலையார். கல்லாடனார் போன்ற பழம் பெரும் புலவர்களின் உரைகளைப் பெறும் மேன்மைமிக்கது. தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதற்குத்திர விருத்தி போன்ற விளக்கவுரைகள் மட்டுமின்றிச் சோமசுந்தரபாரதியார். அரசஞ்சண்முகனார் போன்றோரின் ஆய்வுரை கட்கும் அரங்கமாகியது பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார், மு இராக வையங்கார். வெள்ளை வாரணனார், இலக்குவனார்.வ. சுப. மாணிக்கனார் முதலிய பலரும் தொல்காப்பியக் கடலுள் முழுகி ஆய்ந்து முத்தெடுத்துள் ளனர். தொடர்ந்து ஆய்வுக்களமாக இருந்து வருவதோடு காலந்தோறும். புதுப்புதுக் கருத்துக்களைத் தோண்டி எடுக்கும் சுரங்கமாகப் – பிரதியாகப் புதுமைப் பொலிவோடு பூத்துக் குலுங்கிய வண்ணம் உள்ளது. தொல்காப்பியம் என்றால் என்ன?

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் சி.வை தாமோதரம்பிள்ளை (1892) முடிவாக, நாவலர் சோமசுந்தர பாரதியார் தரும் புகழுரையினை முத்தாய்ப்பாகக் கொள்ளலாம். “குறையியலா நிறைவு அறிவு சால் செறிவு நிரம்புவளம். வரம் பிறவாமல் வரையறுத்து வடித்த முறைவனப்பு, மொழி வளர்ச்சிக்கு என்றும் தளர்ச்சிதராக் கட்டமைப்புகளால் ஒப்புயர்வற்ற சிறப்பு வாய்ந்த இலக்கணநூல் தமிழில் மட்டுமன்று: உலகில் நிலவும் பல மொழிகளில் பாராட்டப்பெறும் எல்லா இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும். எழிலும், பயனும், பண்பும் வாய்ந்தது. வேறெந்தமொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும். அழகும் அருமையும் அமைந்தது.

தொல்காப்பியம் – தொல்காப்பியர் பற்றிய மேற்கண்ட செய்திகள் அனைத்தும் தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன.

Thanks https://kelviyumpathilum.com/

No comments:

Post a Comment