Friday, August 7, 2020

ஒரு வாக்களிப்பு நிலையத்திற்குரிய வாக்குகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து கணக்கிட முடியுமா??


ஒரு தேர்தல் தொகுதி சார்பாக பல வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வாக்கெண்ணும் நிலையத்தில் தொகுதிக்குட்பட்ட வேறு வேறு பிரதேசங்களை சார்ந்த (நிலத்தொடர்பற்ற, வேறு வகையில் இலகுவாக யாரால் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதனை இலகுவாக கணிக்க முடியாத வகையில்)வாக்களிப்பு நிலையங்கள் சார்பான வாக்குப்பெட்டிகள் எண்ணப்படும்

முதலாவது எண்ணிக்கையானது வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டியிலுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை வாக்குச்சீட்டு கணக்குடன் சரிபார்ப்பது ஆகும். இவ்வாறு ஒவ்வொரு பெட்டியாக கணக்கு சரிபார்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக கலக்கப்படும். அதன் பின்னரே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் சார்பாக எண்ணப்படும். வாக்காளர்களது ஜனநாயக உரிமையையும் அவர் யாருக்கு வாக்களித்தார் என்ற இரகசியத்தையும் பேணும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

ஆகவே ஒரு குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் ஒரு கட்சிசார்பாக அல்லது சுயேட்சைக்குழு சார்பாக அல்லது வேட்பாளர் சார்பாக இத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டன என யாராவது கூறினால்..... அதனை நீங்கள் நம்பினால்......
(கோடிட்ட இடைவெளிகளை தேவையான வகையில் பூர்த்திசெய்க).


Pragash Sinnarajah SLAS

No comments:

Post a Comment