ஏன் மனிதர்கள் இந்த ரணகளத்திலும் கிசு கிசுக்களை அதிகம் விரும்புகிறார்கள் ?
கிசு கிசு...
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பரிணாம வளர்ச்சி உளவியல் (Evolutionary Psychology) ஆராய்ச்சியாளர் டாக்டர் மேகன் ராபின்ஸ் இந்த கிசு கிசு பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்..
பல மில்லியன் வருடங்களாக "Survival of the fittest" எனும் ஒரு பதத்தை பொறுத்துதான் இந்த உலகில் உயிரினங்கள் வாழ்வதா இல்லை அழிந்துபோவதா என்பது தீர்மானிக்க படுகிறது. ஒரு உயிரினம் வாழ்வதற்கு குழுக்களாக சேர்ந்து இருப்பது முக்கியம். சும்மா ஒரு குழு சேர்ப்போம் என்றால் சேரமாட்டோம் . அதற்கு பரிணாம வளர்ச்சியில் பலவகை உத்திகளை உயிரினங்கள் தேர்ந்து எடுக்கின்றன.
கிசு கிசு வருவதற்கு முன்னர் நம் முன்னோர்கள் (வேறு யார் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த குரங்குகள் தான்) குழுக்களாக சேர்ந்து இருப்பதற்கு எடுத்த உத்தி ஆளாளுக்கு பேன் பார்ப்பது.. ஒரு குரங்கு மற்ற குரங்குக்கு பேன் பார்க்கும், பேன் பார்க்கப்படும் குரங்குக்கு அது சுகம். இடையிடையே எடுத்த பேனை கொஞ்சம் வாயில் போட்டு மெல்லுவது மற்ற குரங்குக்கு சுகம்... இதில் ஒருவகை ஒற்றுமை (பந்தம் ) வருகிறது.. சேர்ந்து இருக்க ஒரு காரணம் கிடைக்கிறது..
அதன் பரிணாம வளர்ச்சிதான் இந்த கிசு கிசு..
கிசு கிசு பேசும்போது,, நமக்கு ஒருவகை சந்தோஷம் கிடைக்கிறது. பேச இன்னொரு ஆள் வேண்டும். இவர் பெரும்பாலும் எமது கருத்துக்கு ஒத்தவராக இருப்பார்.. இதில் ஒரு பந்தம் (bonding) கிடைக்கிறது.. குழு உருவாகிறது.. ஏதும் அபாயம் வந்தால் அந்த குழுவில் ஒருவர் உதவ வாய்ப்பு இருக்கிறது..
பேண் பார்த்து வாயில் போட்டு மென்றார்கள் நம் முன்னோர்கள்.. நாம் வெறும் வாயை மெல்கிறோம்..
தட்ஸ் ஆல் யூர் ஆனர்.
No comments:
Post a Comment