Monday, April 20, 2020

Chomana Dudi சோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : பி.வி கரந்த்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் அவலத்தையும் காட்சிப்படுத்திய விதத்தில் இந்தியாவின் முன்னோடி தலித் சினிமாவாக சோமனதுடி இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1970ல் வந்த சம்ஸ்காராவுக்கு பிறகு இந்திய சினிமாவில் கவனத்தை ஈர்த்துக்கொண்ட கன்னட படமான சோமனதுடி கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சிவராம் கரந்த் அவர்களின் நாவல் இந்த நாவலை பி.வி கரந்த் இயக்கி 1975ல் வெளியான சோமனதுடி அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் சிறந்த கதை சிறந்த நடிப்பு எனமூன்று தேசிய விருதுகளை பெற்றது
கன்னட கிராமம் ஒன்றில் குடும்பத்தோடு பண்ணை அடிமையாய் வாழும் ”தலித் ” சோமனுக்கு .நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் . அவனுக்கு ஒரு கனவு தானும் ஒருநாள் சொந்தமாக நிலம் வாங்கி அதில் மாடு பூட்டி உழவேண்டும் எனபது . . ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன் சொந்தமாய் நிலம் வைத்திருப்பது குற்றமாகவும் பாவமாகவும் கருதப்படும் இந்திய சமூகத்தில் அவனுக்கு அப்படி ஒரு கனவு வந்திருக்ககூடாதுதான் . ஆனால் வந்து விட்டதே அதனால் அவன் படும் வேதனைகளும் துயரமும் தான் இந்த திரைப்படத்தின் கதை எப்போதெல்லாம் அவனுக்கு அந்த வேதனை வருகிறதோ அப்போதெல்லாம் குடித்துவிட்டு வந்து தன் குடிசையில் மாட்டியிருக்கும் தாளத்தை (துடி) எடுத்து அடிக்க ஆரம்பிப்பான்.
சோமனின் இசை என்பது ஒரு குறியீடு. அது நிலத்திலிருந்து அவனது நரம்புகளை பிடுங்கப்பட்ட வேதனையின் ஆற்றாமை காரணமாக எழும் ஓசை. . காலம் காலமாக அவன் கைகளும் கால்களும் நிலத்தோடு அதன் வாசத்தோடு ஒரு பிரிக்கமுடியாத உறவைக்கொண்டிருக்கின்றன. அவன் நிலத்தை வாங்க உழும் கனவு என்பது அது சொத்து என்பதை விட அவனுக்கு அதன் மீதான உரிமை. அந்த உரிமையை அவன் கடைசி வரை அடையமுடியதபடிக்கு சூழல் அவனை எழவிடாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருக்கிறது.

 தலித் சினிமாவை அதன் முன்னோடி படங்களையும் இயக்குநர்களையும் அவர்களுடைய கருத்தியலையும் வைத்துப் புரிந்துகொள்வது அவசியம். அவர்களுடைய உருவ-உள்ளடக்க உந்துதலை அறிந்துகொள்ள அவர்களது அழகியல் மற்றும் அரசியலின் அறிவு இன்றியமையாதது. அரசியலும் அழகியலும் கருத்தியலினால் செலுத்தப்படுகிறது. அக்கருத்தியலின் அமைப்பியல் மற்றும் உளவியலை உணர, அவர்களது பின்னணியும் அதில் வர்க்கத்தின் பங்களிப்பையும் அறிவது முக்கியமானது. அந்த வர்க்கமே இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை சாதியினால் தீர்மானிக்கப்படுவதால் சாதியின் பங்குதான் மையமானது. இங்கு இந்திய வரலாறு என்று நாம் சுட்டுவது மனிதமற்ற ஒடுக்கும் அதிகாரம் நிறைந்த இந்துக்களின் (பிராமணர்களை விட அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இடைசாதிகளை இன்று குறிக்கும்) 
Thanks www.ajayanbala.com,https://www.minnambalam.com

No comments:

Post a Comment