சினிமா ஒரு நிகழ்த்துக்கலை இலக்கியம் படைப்புக் ( சிந்தனை) கலை இரண்டின் அடிப்படையே வேறு வேறு சினிமா இரண்டு மணிநேரம் திரையில் நிகழ்வதை அடிப்படையாகக் கொண்டு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது. அங்கு காலம் மிக முக்கியம் . பார்வையாளன் நேரத்தை பொறுத்தே அக்கலை யின் வடிவம் தீர்மானிக்கப் படுகிறது .
நாவல் அப்படியல்ல அதில் காலத்திட்டம் ஏதுமில்லை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமனாலும் நிகழலாம் வாசிப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் நேரம் முக்கியமில்லை .
உதாரணத்துக்கு பொன்னியின் செல்வன் புரட்டி புரட்டி ஆயுள் முடியும் வரை படித்து முடிக்கலாம் ஆனால் படமாக வரும் போது அது இரண்டு அல்லது மூன்று மணிக்குள் இருக்கவேண்டும் . அது பத்தாயிரம் பக்கமாக இருந்தாலும் சரி
ஆகவே சினிமவில் ஒரு செயல் அல்லது நிகழ்வு தான் அக்கலையின் மையப்பொருள் அந்த செயல் அவனை இரண்டு மணிநேரம் உட்காரவைக்க வேண்டும் . பூமணியின் வெக்கையில் ஒரு கொலை மற்றும் பழி வாங்கல் குறித்த பதட்டம்தான் கதைப்பொருள் சுஜாதாவின் ப்ரியாவிலும் ஒரு நாயகிக்கு ஆபத்து அதை வக்கீல் முறியடிப்பது .. இப்படி செயலை அடிப்படையாக க்கொண்டிருக்கும் நாவல்கள் சினிமாவுக்கு எடுபடும்
செயல் என்றால் குத்து வெட்டு கொலை என்றில்லை இரண்டுபேர் காதலிக்கின்றனர் இறுதியில் சேருவார்களா இல்லையா இதுவும் செயல்தான் காதலிப்பவர்கள் பிரிந்து விட்டனர் சேருவார்களா இல்லையா இதுவும் செயல்தான் . பெரும்பாலான நாவல்களில் பல செயல்கள் இருக்கின்றன . சிலர் இது தெரியாமல் ஒட்டுமொத்த நாவலையும் கதை என நினைத்து களமிறங்கும் போது தான் சிக்கல்
No comments:
Post a Comment