Friday, March 13, 2020

ஆதித்தமிழர் , சைவ மக்களின் சில வாழ்வியல் வழிமுறைகள்


(1) வந்தாரை வரவேற்கும் பண்பாடு எங்கள் தமிழர் பண்பாடு. இருகரம் கூப்பி வந்தனம் செய்தே வரவேற்றனர்.
(2) வாசலில் பசுவின் சாணத்தினால் மெழுகப்பட்ட முத்தத்தில் கோலங்கள் மற்றும் மஞ்சளினால் ஆனா பிள்ளையாருடன் அறுகம்புல்
(3) வாசலில் மஞ்சள் , நிலையில் மாவிலை வேப்பிலை தொங்கிக்கொண்டிருக்கும்.
(4) சாணத்தினால் மெழுகப்பட்ட அடுப்பங்கரை
(5) எலுமிச்சம் பழப்புளி , சாம்பல் தேய்த்த கோப்பையில் தேநீர் மற்றும் சாப்பாடு
(6) கை , கால் , முகம் கழுவிய பின்னர் , விபூதி தரித்து உணவு உண்டனர் எங்கள் முன்னோர்கள்.
(7) ஒரே கோப்பையில் சாப்பிடாமல் வாழையிலை , தாமரையிலை போன்று இலைகளில் விருந்தளித்தார்.
(6) உண்ணும் உணவில் கண்டிப்பாக பருப்பு வைத்தனர் பருப்பில் மஞ்சள் வைத்தனர்.
(7) கடைசியில் ரசத்தினை வைத்தனர் ரசத்தினுள் உள்ளி , மிளகு , மிளகாய் என அள்ளிப்போட்டனர்
(8) பெண்கள் தினசரி மஞ்சள் பூசினர்
(9) அனைவரும் மூன்று குறியுடன் திருநீறு பூசினர்
(10) கோவில் வாசலில் கைகால் கழுவினர்
(11) கோவிலினுள்ளே தீபங்கள் ஏற்றினர்
(12) பூசைகள் தோறும் சங்கொலி , சேமக்கலம் , மேளம் , பறை , மணியென மாறிமாறி முழங்கினார்.
(13) தீபவரிசையில் கடைசியில் வீடுசெல்ல முன்னர் பஞ்சரார்த்தி என்று ஐந்து இடங்களில் கற்ப்பூரம் வைத்து விளாசியெரித்து இருகைகளாலும் தொட்டு வணங்கினர்.
(14) பின்னர் விபூதி தரித்து தீர்த்தம் தீர்த்தம் கொடுத்தனர். தீர்த்தனினுள்ளே திரவியங்களை போட்டனர்.
(15) கோவிலுக்கு சென்று வந்தால் மீண்டும் கைகழுவாமல் முகம் கழுவாமல் அப்படியே இருக்க சொன்னார்கள்.
(16) சாவு விழுந்தால் பறை அடித்தனர்
(17) சுடலை சென்றால் உலக்கையை கடந்து வேப்பிலை உண்டனர்
(18) சாவுவீடு சென்றால் வெளியிலே குளித்தனர் , கிணத்தினை தொடாது மற்றவரை அள்ளி ஊத்தசொன்னனர்.குளித்தபின் திருநீறு பருப்புடன் சாப்பாடும் இட்டனர்.
(19) குழந்தையை எண்ணெய் வைத்து வெய்யிலில் கிடத்தினர்
(20) மல்லிதண்ணி , தூதுவளை குடிநீர் , இஞ்சி தேநீர் , மிளகுடன் பால் என்றும் துளசி , கர்ப்பூரவள்ளி என்றும் வாரத்தில் சேர்த்தனர்
(21) ஆண்கள் மீசை வளர்த்தனர் , சுவாசத்திற்கு பாதுகாப்பானது.
(22) புற்பாயில் படுத்தெழும்பினர் , வேப்பங்குச்சியில் பல்துலக்கினர்
(23) காலைக்கடனை குந்தியிருந்தனர்
(24) சுவாச பயிற்சியென திருமந்திரம் வழிநின்றனர்
(25) மூச்சுவிடாமல் திருமுறை ஓதினர்
(26) ஓம் நமசிவாயவென ஐந்தெழுத்தை ஓதினர்
(27) விபூதி தரித்தே உறக்கத்திற்கு போயினர்
(28) குழல்கொண்டு அடுப்பு ஊதினர்
(29) முத்தத்தில் துளசி , பக்கத்தில் கர்ப்பூரவள்ளி , முன்னாலை வேம்பு , கதவுநிலைகள் வேம்பு , கட்டில் வேம்பு சட்டங்கள் வேம்பு என்று தெரிந்தே வைத்தனர்.
(30) மக்கள் கூடுமிடங்களில் வாழை தோரணம்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சைவத்தமிழன் ஆதித்தமிழன் பண்பாடுகளை அறிய முன்வாருங்கள். மூடநம்பிக்கை என்று சொல்லவதற்கு உங்களுக்கு அறிவு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டி தேடுங்கள். மேற்குலகத்திக்கு தெரியும் வெளியில் காட்டிட வெட்கம் மற்றும் அதனை மருந்தாக்கி விற்க வழிதேடுவினம். ஆகவே நாங்கள் தான் விழித்தெழவேண்டும்.உலகின் பண்பாடு கொண்ட முதல்குடி ஆதித்தமிழர் என்பதை உலகறிய செய்வோம்.
திருவம்பலம் தென்னவன்
தென்னாடு

1 comment:

  1. Your Affiliate Money Printing Machine is ready -

    Plus, getting it set up is as simple as 1...2...3!

    Follow the steps below to make money...

    STEP 1. Input into the system which affiliate products the system will advertise
    STEP 2. Add PUSH BUTTON TRAFFIC (it ONLY takes 2 minutes)
    STEP 3. See how the affiliate system grow your list and sell your affiliate products all by itself!

    Do you want to start making profits??

    Click here to activate the system

    ReplyDelete