Tuesday, October 29, 2019

12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2019பரிகாரங்கள் ,Guru Peyarchi Parikaram 2019 - 2020

அன்பான வாச­கர்­களே, குரு பார்க்க கோடி நன்மை – நவ­கி­ர­கங்­க­ளில் வியாழ பக­வானே முதன்மை சுப கிர­கம். தேவர்­க­ளின் குரு­வாக இவர் இருந்து – நவ­கி­ரக அந்­தஸ்து பெற்­ற­தால் இவ­ருக்கு சுப கிர­கங்­க­ளில் முதன்மை அந்­தஸ்து கிடைத்­தது. வேதங்­கள், நல்ல குணம், நன்­ன­டத்தை, தர்ம காரி­யங்­கள், புத்தி கூர்மை, கல்வி, எடை, மந்­தி­ரிப் பதவி, அர்ச்­ச­கர், கோயி­லில் பூஜை செய்­ப­வர்­கள், வழி­பாடு, கற்­றுத்­த­ரு­தல், மூத்த சகோ­த­ரர், மகன், பணம், மதிப்பு, வாழ்க்­கைத் துணை நல­னில் அக்­கறை, பூக்­கள், கரும்பு, தென்னை மரம், வெற்­றிலை, இனிப்­பான பழங்­கள் கொண்ட மரங்­கள், பிரத்­யே­க­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வீடு­கள் போன்ற நற்­ப­லன்­களை நமக்கு அளிக்­கக்­கூ­டிய சக்தி பெற்­ற­வர். ஜாத­கத்­தில் இவ­ரது பலத்தை பொருத்து இது கூடும் அல்­லது குறை­யும். ஒவ்­வொரு ராசி­யி­லும் ஒரு ஆண்டு சஞ்­சா­ரம் செய்­ப­வர். தனுசு – மீனம் ராசி­க­ளுக்கு அதி­பதி – கட­கத்­தில் உச்ச பலம் பெறு­வார் – மக­ரத்­தில் நீச்ச பலம் பெறு­வார் – 12 ராசி­க­ளைக் கடந்து வர 12 ஆண்டு ஒரு­மா­மாங்­கம் ஆகும்.


இது­வரை விருச்­சிக ராசி­யில் சஞ்­ச­ரித்த வியா­ழன் (எ) குரு­ப­க­வான் 13.03.2019 புதன் கிழமை – விளம்பி ஆண்டு – மாசி மாதம் – 29ம் தேதி­யன்று – வளர்­பிறை – சப்­தமி திதி­யில் – ரோகிணி நட்­சத்­தி­ரம் – சித்­த­யோ­கம் கூடிய சுப­வே­ளை­யில் – தனுசு ராசி­யில் – மூலம் நட்­சத்­தி­ரம் – 1ம் பாதத்­தில் பெயர்ச்­சி­யாகி சஞ்­ச­ரிக்­கி­றார். அப்­பொ­ழுது 12 ராசி­க­ளுக்­கும் குரு­பெ­யர்ச்­சி­யின் பலன்­களை தெரிந்­து­கொள்­ளுங்­கள். இதில் வக்­ர­மாகி – விருச்­சி­கம் செல்­கி­றார். அதன் பிறகு தனுசு ராசி வரு­கி­றார். 10.4.2019 முதல் வக்­ர­மாகி கேட்டை நட்­சத்­தி­ரம் காலில் சஞ்­ச­ரிக்­கி­றார். இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி தனுசு ராசிக்கு வரு­கி­றார். அங்கு 16.11.2019 வரை மூலம் நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதன் பிறகு 17.11.2019 முதல் பூரா­டம் நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­கி­றார். அங்கு 18.2.2020 வரை சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதன் பிறகு 6.3.2020 முதல் உத்­தி­ரா­டம் நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதில் 27.03.2020 முதல் 8.7.2020 வரை குரு அதி­சா­ரம் பெற்று மகர ராசிக்கு சென்று அதன் பிறகு தனுசு ராசிக்கு வரு­கி­றார்.

14.12.2020 வரை உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் சஞ்­ச­ரித்து 15.12.2020 அன்று குரு மகர ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இந்த கால சூழ்­நி­லைக்கு ஏற்ப குரு­வின் பலன்­கள் கூடும் – குறை­யும். மேஷம், மிது­னம், சிம்­மம், விருச்­சி­கம், கும்­பம் ஆகிய ராசி­க­ளுக்கு உத்­த­ம­மாக – சாதக பலன்­கள் தரு­வார். ரிஷ­பம், கட­கம், கன்னி, துலாம், தனுசு, மக­ரம், மீனம் ஆகிய ராசி­க­ளுக்கு சாத­க­மற்ற நிலை­யில் இருப்­ப­தால் இவர்­கள் வியா­ழக்­கி­ழமை அன்று தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு செய்­வது சிர­மப் பரி­கா­ர­மா­கும்.

No comments:

Post a Comment