Wednesday, July 3, 2019

மருத்துவர்_தினம் பணமா?_அறிவியலா?


உங்களிடம் ஒரு கேள்வி...
அரசு பணியில் ஒரு பெரும் அதிகாரியாக அமர்ந்து உள்ளீர்கள்.. கோடிக்கணக்கான பணம், செல்வம், வீடு, நிலம் என நீங்கள் கேட்கும் அத்தனையும் உங்கள் காலடியில் இலஞ்சமாக கொட்ட படுகிறது...
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று...ஒரு கையெழுத்து...
புதிதாக சந்தையில் வந்த ஒரு மருந்தை நம் நாட்டில் மக்கள் பயண்படுத்தலாம் அது பாதுகாப்பானதுதான் என்ற அனுமதி கையெழுத்து மட்டும் நீங்கள் போட வேண்டும்...
பாதுகாப்பிற்கான மருத்துவ ஆய்வு ஆதாரங்களை அந்த கார்ப்பெரேட் மருத்துவ கம்பெனி இன்னமும் சமர்ப்பிக்க வில்லை...

ஆனால் கோடிகளில் புரளும் அந்த கம்பெனி உங்களுக்கு பணத்தை காட்டி மயக்குகிறான்
உங்கள் நண்பர்களெல்லாம் கையெழுத்து போட்டு பணம் பார்த்து விட்டார்கள்...
உங்கள் நிலை என்னவாக இருக்கும்?
நான் கற்ற மருந்தியல் அறிவியல் மக்களுக்கு பயண்பட வேண்டும்...ஆய்வு ஆதாரங்கள் இன்றி நான் எந்த மருந்தையையும் நம் நாட்டில் அனுமதிக்க மாட்டேன்! என்ற கருத்தா?
அல்லது
அறிவியலாவது டேஷ் ஆவது...எவனோ என்னமோ செய்கிறான் நமக்கென்ன? நாலு காசு பார்த்து செட்டிலாவோம் என்ற சிந்தனையா??
சிந்தியுங்கள்...
இதே நிலை 1960 களில் அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் கேத்லீன் ஓல்டஹாம் ( Francis Kathleen Oldham) என்ற பெண் அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு மேலாண்மை (FDA- Food and Drug Administration) துறை உயர் அதிகாரியாக இருந்தவருக்கு வந்தது...
அந்த துறையில் இவர்‌ பதவியில் இவர் மட்டுமே ஒரே பெண் அதிகாரி. அதுவே அக்காலத்தில் பலருக்கு கடுப்பு. மேலும் அவர் மிக நேர்மையான அதிகாரி.
மேற்கு ஜெர்மன் நாட்டு மருந்து கம்பெனியான கெமி குருனென்தல் (Chemie Grünenthal) கர்பமான பெண்களின் தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்றவை தடுக்க தளிடோமைட் (Thalidomide) என்ற மருந்து கண்டுபிடித்து ஐரோப்பிய முழுவதும் அமோகமாக விற்பனை செய்தது. அந்த மருந்தை பல கோடி டாலர்கள் பணம் கொடுத்து அமெரிக்கா கார்ப்பரேட் மருத்துவ கம்பெனியான மரியோன் ஆய்வகம் (Marion Laboratoires) அமெரிக்காவில் விற்க உரிமைகளை வாங்கியது.
ஆனால் அமெரிக்காவினுள் அந்த மருந்தை பயண்படுத்த அரசாங்க அனுமதி வேண்டும். அதற்கு கேத்லீனின் அனுமதி கையொப்பம் வேண்டும்.
கேத்லீனின் சக அதிகாரகளெல்லாம் காசு வாங்கிய நிலையில் கேத்லீன் மட்டுமே கையொப்பம் இட மறுத்தார்...
அந்த மருந்து பாதுகாப்பானது தான் என்ற குறைந்த பட்சம் விலங்குகள் மீதான ஆய்வு ஆதாரங்கள் எங்கே? அதை காட்டுங்கள்..அதை படித்து விட்டு அனுமதி தருகிறேன் என்றார்...
எவ்வளவு காசு பணம் வீடு நிலம் என ஆசை காட்டியும் அவர் திட்டவட்டமாக ஆதாரம் இல்லாமல் அனுமதிக்க மறுத்து விட்டார்.
அண்டை நாடான கேனடா, மேற்கு ஐரோப்பா நாடுகள் என அனைத்து வளர்ந்த நாடுகளும் பயண்படுத்துகின்றன நீங்கள் மட்டும் ஏன் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள்.
அவர் மசியவில்லை.
7 முறை அந்த கம்பெனி அந்த மருந்தை விற்க விண்ணப்பத்தும் 7 முறையும் நிராகரித்து விட்டார்...
ஓரிரு ஆண்டுகளுக்குள் கேனடா, ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா நாடுகள் என பல நாடுகளிலிருந்தும் திடிக்கிடும் தகவல் வந்தது.
தளிடோமைடை கர்ப்ப காலத்தில் உண்ட பெண்களுக்கு குழந்தைகள் ஊனமுற்ற பிறக்கிறார்கள் என்ற தகவல். சூம்பிபோன கைகால்களுடன் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் பிறந்தன..அதற்கு காரணம் தளிடோமைட் மருந்தால் தொப்பில் கொடி வழியாக கருவுக்கு சென்று கரு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை கண்டனர்...
தளிடோமைட் தயாரித்த ஜெர்மானிய கம்பெனி கடும் நஷ்டத்தில் வீழ்ந்தது.
கேத்லீன் அந்த மருந்தை எல்லைகளிலேயே தடுத்ததால் பல்லாயிர குழுந்தைகள் அமெரிக்காவில் காப்பாற்ற பட்டனர் என்ற உண்மையை அறிந்த கென்னடி அரசாங்கம் கேத்லீனுக்கு நாட்டின் உயர்ந்த குடிமகள் என்ற விருதை 1965 வழங்கியது...
கேத்லீன் 107 வயது வரை வாழ்ந்து 2015 இல் தான் இறந்தார்.
அந்த அம்மையார் பணத்தாசையில் மயங்காமல் அறிவியலின் பக்கமே நின்று மக்களை பாதுகாத்ததால் நம் குழு அவருக்கு தலை வணங்குகிறது....
அறிவியல் ஆதாரமா? இல்லை பணமா? என்றால் அறிவியல் ஆதாரங்களையே தேர்வு செய்ய வேண்டும் என்று மிக சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவருக்கு இந்த மருத்துவர் தினத்தில் நம் வணக்கங்கள்

No comments:

Post a Comment