Thursday, April 4, 2019

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் ஜயா அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ஆழ்ந்த இரங்கல்.

மகேந்திரன் ஜயா - பிறப்பு: சூலை 25, 1939 இறப்பு: ஏப்ரல் 2, 2019 புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.
"நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டு விட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன."
- மகேந்திரன்.

No comments:

Post a Comment