Saturday, March 16, 2019

யாழில். வறுமையில் இருந்த குடும்பம் ஒன்றுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் செய்த செயல்!!


அன்றாட செலவினை ஈடுசெய்ய முடியாமல் தவிர்த்து வரும் சுழிபுரம் வட்டுக்கோட்டையினை சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு, இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தரான சயந்தன், குறித்த குடும்ப நிலைமையை அறிந்து செய்த உதவி பாராட்டுக்குரியது.
சுழிபுரம் வட்டுக்கோட்டையினை சேர்ந்த குடும்பம் ஒன்று இருப்பதற்கு காணி இல்லாமல் கொட்டில் வீட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடன் துன்பத்தையே சுமந்து வாழ்க்கையினை நடாத்தி வருகின்றார்கள்.
இவரது மூத்த மகள் 6ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மற்றைய இரு பிள்ளைகளில் ஒருவருக்கு சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில் முகப்புத்தகத்தில் இவர்களது நிலைமை தொடர்பில் பதிவேற்றப்பட்டதை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரான சயந்தன் என்பவர் இந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களின் நிலைமையை அறிந்து, அதை தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்ததுடன் மட்டுமில்லாமல் தனது வெளிநாட்டு நன்பர்களினது உதவிகளை பெற்று அந்த குடும்பத்திற்கு உடன் உதவியுள்ளார்.
இதனடிப்படையில் 6ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவிக்கு ஒரு சைக்கிளும் அவர்கள் வசிப்பதற்கும் வீடு ஒன்றை கட்டுவதற்குமாக காட்டுபுலம் என்ற கிராமத்தில் 3 பரப்பு காணியும் விலைக்கு கொள்வனவு செய்து சட்டத்தரணி கீர்த்தனா என்பவரின் உதவியுடன் அந்த குடும்பத்திற்கு இலவசமாக எழுதி வைத்துள்ளார்.




இவரது செயல் அனைத்து உத்தியேகஸ்தர்களுக்கும், சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிற்கும் ஒரு முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரான சயந்தன் என்பவரது நற்சேவை தொடர்பில் நாமும் வாழ்த்துக்களை கூறுவதுடன் அவரைப்போல் நாமும் அந்த குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் உதவ வேண்டும்.

No comments:

Post a Comment