Saturday, February 9, 2019

தொழில்நுட்ப அல்லது ஊடகத் தீர்மானவாதம்

டார்டு பள்ளி:’மாஸ்கோ-டார்டு குறியியல் பள்ளி என்று சில சமயங்களில் அழைப்படும் இந்த பள்ளி 1960களில் யூரி லோட்மேனால்(1922-1993)தொடங்கப்பட்டது. அவர் எஸ்டோனியாவில் உள்ள டார்டு பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவர். லோட்மேன் உருவவியல்வாத அமைப்பியல் குறியியல் மரபைப் பின்தொடர்ந்தவர். ஆனால் அவர் குறியியலின் பரப்பை ’கலாச்சார குறியியல்’ என்ற துறையை நிறுவி விரிவாக்கினார். அவர் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை ஒருங்கிணைந்த குறியியல் கோட்பாட்டைக் கொண்டு வளர்க்கும் இலக்கை அவர் கொண்டிருந்தார்.
தொழில்நுட்ப அல்லது ஊடகத் தீர்மானவாதம்:இந்தச் சொல் ‘தொழில்நுட்பத் தீர்மானவாதம்’ என தோர்ஸ்டெய்ன் வெப்லெனால் உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள்: பெரிய சமூக வரலாற்று மாற்றங்களைச் சமூக அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் அகன்றசமூக பரப்பில் நிகழ்த்துபவை என்ற முதன்மை காரணமாக அறியப்படுகின்றன. மேலும்/அல்லது நுட்பமான ஆனால் ஆழமான சமூக மற்றும் உளவியல் தாக்கங்கள், நுண்ணியசமூகப் பரப்பில் குறிப்பிட்ட வகையானக் கருவிகளின் தொடர் பயன்பாட்டினால் நிகழ்கின்றன. எந்த வகையான குறிப்பிட்ட தொழில்நுட்ப ‘புரட்சியாக’ இருந்தாலும், தொழில்நுட்ப தீர்மானவாதிகள் அதனை நாடகீயமான ‘தவிர்க்கமுடியாத’ இயங்கும் விசை என முன்வைக்கிறார்கள். அதனுடைய ‘தாக்கம்’ ஆழமான ‘தொடர்ந்திருக்கக்கூடிய’ ‘விளைவுகள்’ அல்லது ‘பாதிப்புகளுக்கு’க் ‘கொண்டு செலுத்தும்’ என கூறுகிறார்கள்.
தொழில்நுட்பம் தனித்தன்மையானது என்று முன்வைக்கப்படுகிறது. தொழில்நுட்பத் தீர்மானவாதம் தொழில்நுட்பத்தின் ‘நடுநிலை’ மீது கொண்டிருக்கும் நம்பிக்கையுடன் தொடர்புடையது. ஆனால் அது சில சமயங்களில் நடுநிலையற்ற தொழில்நுட்பத்துடனும் தொடர்புகொண்டதாக இருக்கிறது. அது தொழில்நுட்பத்தை வெறும் ‘பயன்படுத்தும்’ நிலைப்பாடாக இல்லாமல் தொழில்நுட்பத்திற்கு ‘பழக்கம் ஆகிவிட்ட’ நிலையையும் குறிக்கிறது. தொழில்நுட்பத்தின் ‘தாக்கம்’ என்ற விரிந்த கூற்றுகளை(மக்லூஹன் சொன்னது போன்றவை) பொருளாக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கப்படவேண்டியவை.
தொழில்நுட்பத் தீர்மானவாதம் குறிப்பாகத் தொழில்நுட்பத்தின் மீது கவனப்படுத்தும் இடத்தில்(மக்லூஹனின் ஆய்வு போல்) அது ‘ஊடகத் தீர்மானவாதம்’ என அழைக்கப்படுகிறது. தொழில்நுட்பத் தீர்மானவாதத்தின் மிதவாதம் குறிப்பிட்ட கருவிகளின் அல்லது ஊடகத்தின் தொடர் பயன்பாடு, நுண்ணிய தாக்கத்தை நுகர்வோர் மீது இருக்கும் என்று கூறுகிறது. ஆனால் அது சமூகச் சூழலில் அந்தப் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானதாகும்.
Thanks 

Mubeen Sadhika

No comments:

Post a Comment