Tuesday, February 26, 2019

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக யசோதை செல்வக்குமாரன்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…!
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தின் வல்வெட்டித்துறை மண்ணின் தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருக்கும் யசோதைக்கான இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் முகப்புச் செய்தியாக வெளியிட்டுள் ளன.



கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி இந்த பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ''M.S.Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாகவும் சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
தான் கற்பிக்கும் மாணவர்களின் அன்புக்கும். மதிப்புக்கும் உரியவராகத் திகழும் யசோதையின் வெற்றி குறித்து அவரிடம் கற்ற மாணவர்கள் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 
இந்த விருதினைப் பெற்றமைக்காக இவருக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த சாதனைக்கான விருது வழங்கும் வைபவமும்,பரிசுத்தொகையும் டுபாயில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கொடுமை யிலிருந்து மீண்ட யசோதையின் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது.
அங்கு போய்ச் சேர்ந்த புதிதில் மிகவும் கடினமான சவால்களைச் சந்தித் யசோதை கல்வியில் மிக உயர்ந்த பெறுபேற்றை அடைந்ததுடன், அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள அகதிகளுக்கு நல்ல தரமான கல்வியைப் போதிக்கவேண்டும் என உறுதி உறுதி பூண்டு கல்விச் செயற்பாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ரூட்டி ஹில் உயர் நிலைக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் 80வீதமான மாணவர்கள் அகதிகளாக வும் புலம்பெயர்ந்தவர்களாகவுமே உள்ள நிலையில் அவரது சேவையினால் பல ஆயிரக்கணக்கான வசதி குறைந்த மாணவர்கள் பயனடைந்தனர்.
யசோதை செல்வக்குமரன் அவர்களின் தாயும் தந்தையும் பொறியிலாளராக இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று இங்கேயே வாழவேண்டு மென்று விரும்பியிருந்த நேரத்தில், தமிழர்களுக் கெதிரான வன்முறைகளின் கொடுரத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சிட்னியில் வசித்தது வந்தார்கள்.
வல்வெட்டித்துறை,தெணியம்பையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவரது தாத்தா,பாட்டி இருவருமே கல்வித் துறையில் புகழ்பெற்றவர்களாக விளங்கினார். யசோதையின் அம்மப்பா திரு.வல்லிபுரம் அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூ}ரியின் உப அதிபராகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர. நாங்கள் எல்லோரும் கெங்கா ரீச்சர் என அழைக்க்ப்படும் இவரது பாட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதேவேளை இவரது மாமன்மார் பொறியிலாளர்களாக இலங்கை யிலேயே பணிபுரிந்தவர்கள். கெங்கா ரீச்சரின் சகோதரி திருமதி.ருக்மணி ரீச்சர் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புகழ்பூத்த அதிபராகவும், இவரது தாத்தாவின் சகோதரன் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் புகழ் பூத்த அதிபராகவும் சிறப்புடன் கடமையாற்றி ஓய்வு பெற்றனர்.
இவ்வாறான ஒரு பாரம்பரியம் மிக்க கல்விப் புலத்தில் இருந்து தோன்றிய யசோதையின் உள்ளத் திலும் கூட கல்வியில் மேலோங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் பாதிக்கப்பட்டுப் பின்தங்கி வாழும் சமுகங் களின் வாழ்க்கைத் தரத்தைக் கல்வியினூ டாகவே உயர்த்த வேண்டுமென்பதற்காக அகதிகள், புலம் பெயர்வாளர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள பழங் குடியினரின் சமத்துவ மான கல்விக்காக அவர் தினமும் போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற் திட்டங் களை முன்வைத்து அவர்களிடையே விழிப்புணர் வையும் ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்து வெற்றி கண்டவர்.
ரூட்டி ஹில் கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை செல்வகுமரன் அவர்களே காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
இதேவேளை யசோதையின் இந்த சாதனையானது இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளன.. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறி வல்வெட்டித்துறை மண்ணுக்குப் பெருமையையும் கௌரவத்தையும் தேடித் தந்த செல்வி.யசோதை செல்வகுமரன் அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் சார்பிலும், அவரின் தாய் மண்ணான வல்வெட்டித்துறையின் சார்பிலும் எங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஆசிரியர் தொழில் என்பது புனிதமானது மட்டுமல் லாது கல்வி ஒளியின் ஊடாக மனதில் உள்ள அறியாமை என்ற இருளை அகற்றி சமுகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்ற ஒரு பணி என்ற வகையில் அவரது இந்த வெற்றி உலகின் ஆசிரியர் சமுகத்திற்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும்

தேசியத் தலைவரின் வரவால் புகழ் பெற்ற வல்வையில் இன்னுமொரு தமிழச்சி புகழ் தேடித் தந்துள்ளார்…..மேலும் பல ஆண்டுகள் நலமே வாழ்ந்து மேலும் மேலும் பல விருதுகளைப் பெற்று கல்விச் சேவையை ஆற்றக்கூடிய மனோ வலிமை யையும், உடல்ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக் கின்றோம்.
“தோன்றில் புகழொடு தோன்றுக....!”

No comments:

Post a Comment