Monday, January 14, 2019

நம் பால்வழிமண்டலம்

Mohana Somasundram
சூரியனை நமது பூமி 365.25 நாளில் சுற்றி வருகிறது.சூரியன் நொடிக்கு 220 கி.மீ வேகத்தில் பால்வழி மண்டலத்தை சுற்றுகிறது. இந்த வேகத்தில் சுற்றினால் ஒரு முறை பால்வழிமண்டலத்தை நம் சூரியன், அவரது குடும்பத்தின் குஞசு,குளுவானையும் (சூரிய குடும்ப உறுப்பினர்களான, கோள்கள், துணைக்கோள்கள் ,அஸ்டிராயிடு , குயூப்பியார் வளையம் மற்றும் ஊர்ட் மேகம் இவற்றையும் இழுத்துக்கொண்டு ஒரு முறை சுற்றி முடிக்க, 24 கோடி ஆண்டுகள் ஆகின்றன.இதனைத்தான் பிரபஞச ஆண்டு (cosmic year ) அம்மாடியோவ்..இவை எல்லாம் எம்புட்டு பெரிசு.



நமது சூரிய குடும்பம் என்பது நாம் நிலா இல்லாத இரவில் பார்க்கும் ஒரு பனிபோன்ற/பால் போன்ற அடர்மேகத்தின் /பால்வழி மண்டலத்தில் ஒரு துளி
பால்வழிமண்டலம் ,நம் வீட்டில் பெரிய ஆப்பம் சுடுவோமே அதுபோல. . அந்த ஆப்பத்தின் ஓர் ஓரத்தில் ஒரு சீனித் துணுக்கை வைத்தது போன்றதுதான்,நம் சூரிய குடும்பம். அந்த சீனித்துகள் தான் நமது சூரிய குடும்பம். ஆப்பம் போன்றது பால்வழி மண்டலம். வானில பெரியதாகத் தெரிந்தாலும், அதனுடைய தாய்வீடான பால்வழி மண்டலத்தில் ஒரு சீனித்துகள் அளவே.
இந்த பால்வழிமண்டலத்தில் என்ன வெல்லாம் உள்ளன தெரியுமா? ஏராளமான செத்துப்போன ,செத்துக்கொண்டிருக்கும் விண்மீன்கள்,1000 கோடி வெள்ளைகுள்ளன்கள், 10 கோடி நியூட்ரான் விண்மீன்கள், மற்றும் நூற்றுக்கணக்கான கருந்துளைகள் இருக்கின்றன. இவைகளுக்கு விண்மீன்களில் இடையில் உள்ள பொருட்கள் உள்ளன.
கருந்துளைகள் இருப்பதை 1916 ல் கண்டுபிடித்தவர் Karl Schwarzschild. இது பற்றிய கருத்தினை ஆல்பர்ட் ஐன்ஸடீன் 1915ல், சார்பியல் விதியைச் சார்ந்து கூறினார். இதற்கு கருந்துளை என்று 1967ல் நாமகரணம் செய்தவர் ஜான் வீலர் என்ற விஞ்ஞானிதான். முதல் கருந்துளை முதன் முதல் 1971ல் தான் கண்டுபிடிக்கப்பப்ட்டது. இவைகளுக்கும் வயது உண்டு.Hawkins radiation என்றும் மிகக் மிகக் குறைந்த அளவு பொருளை வெளியில் விட்டுக்கொண்டு மெல்ல மெல்ல செத்துப்போகும். இது நடந்து முடிக்க இந்த பிரபஞசத்தின் வயதை விட அதிகம் ஆகலாம்.
இது இப்படி இருக்க, வானவியலாளர்கள் பலே கில்லாடிகள். 2018, ஜூன் 17 ,ம் நாள் ஒரு கருந்துளை/ நியூட்டரான் விண்மீன் பிறப்பைப் பற்றி தகவலை Northwestern University யின் சர்வதேச ஆய்வுமையம் பார்த்ததுடன் அதனைப் படமும் எடுத்துவிட்டார்கள் என்னே அறிவியலின் அதிசயம்.
ஹவாயின் W.M. Keck Observatory மற்றும் அரிஸோனாவின் MMT Observatory அறிவியலாளர்கள் இந்த தகவலை இப்போதுதான் 2019, ஜனவரி 10ம் நாள் வான் இயற்பியல் பத்திரிகையில் வெளியிட்டார்கள்.
ஜூன் மாதம் எடுத்த படத்தில் . திடீரென மாயமான வான் ஒளியை,கோடைகால வானில், வடக்குப்பக்கம் தொலை நோக்கியில் பார்க்கின்றனர்.பிறகு கொஞச நேரத்தில் அது மறைந்து போகிறது.அதனைச் சுற்றி ஏராளமான வெளிச்ச புள்ளிகள். அதனை கண்டுபிடித்து 80 நாட்கள் ஆராய்ந்த பின்னர் அது கருந்துளை /நியூட்ரான் விண்மீன் பிறப்பாக இருக்கலாம் என அறியப்படுகிறது. ,இதற்கு the Cow என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.இதனை தொலைநோக்கியில் பார்த்த அந்த சர்வதேச குழுவின் தலைவர் ரப்பெல்லா மார்குட்டி (Raffaella Margutti (பெண் ) இந்த cow கருந்துளையின் /நியூட்ரான் விண்மீன் பிறப்பாக இருக்கலாம்.நாங்க படித்த தெல்லாம், ஒரு விண்மீன் இருக்கும்போதுதான்,கருந்துளை.நியூட்ரான் பிறக்கிறது என. ஆனால் நேரில் பார்த்த அனுபவம் யாருக்கும் இல்லை என்கிறார். "We think that 'The Cow' is the formation of an accreting black hole or neutron star," said Northwestern's Raffaella Margutti, who led the research. "We know from theory that black holes and neutron stars form when a star dies, but we've never seen them right after they are born. Never.
இந்த கருந்துளை பிறப்பு பால்வழி மண்டலத்தில்ஹெர்குலிஸ் விண்மீன் தொகுதி/மண்டலத்தில் உள்ள CGCG 137-068 galaxyல் உள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளியாண்டு(ஓர் ஒளியாண்டு = 9.6டிரில்லியன் கி. மீ) தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு தொலைவில் உள்ள வான்வெளியில்,நிகழ்ந்த கருந்துளை.நியூட்ரான் விண்மீன் பிறப்பை வானவியலாளர்கள் முதன் முறையாக ஹவாயில் உள்ள தொலைநோக்கி மூலம் பார்த்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமான தகவல் அல்லவா?

No comments:

Post a Comment