Tuesday, September 25, 2018

மகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...


புரட்டாசி மாதத்தில் சூரியன் அமரபக்ஷம் (பௌர்ணமி முதல் அம்மாவசை வரை கன்னி ராசியில் நுழையும் காலத்தில் பிரவேசிப்பது மகாலயம் எனப்படும்
அட இன்று புரட்டாசி 8 தேதி ஆகிறது இன்றுதான் சூரியன் கன்னி ராசிக்குள் 1 ஆம் தேதியே நுழைந்து விட்டானே என்று பலர் கேட்பது புரிகிறது ..

இது நாம் பலமுறை சொன்ன மாதிரி எல்லா பண்டிகையும் சந்திர மாசம் , பௌர்ணமி அன்றுதான் ஆரம்பிக்கும் , அதில் இருந்துதான் பண்டிகைகள் நிர்ணயக்க படும் .
வீட்டில் இருக்கும் பஞ்சாங்கத்தை எடுத்து கிரக பாத சாரங்கள் என்று ஒரு பக்கத்தில் ஒவ்வொரு கிரகமும் என்று எந்த நக்ஷத்திரத்தில் இருக்கு என்று போட்டு இருக்கும் அதில் ஒரு 7 or 8 தமிழ் மாதத்தில் தேதியில் கன்யாயன, துலாயன என்று போட்டு இருக்கும் .. அதுதான் சந்திர மாச ஆரம்பம் !!! (அன்று பௌர்ணமியாக இருக்கும் !!)
12 சூரிய ராசிகளில் இந்த மாதம் 6 வது .. சரிபாதி , உத்திர நக்ஷத்திர நான்காம் பாதத்தில் சூரியன் நுழைந்து சந்திரன் பூரணமாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் (180* ) எதிர்புறம் நிற்கும் பொது
சந்திர உலகமாம் நமது பிதுர் உலகம் , வெறும் பொருளால் (material world) ஆனா பூமிக்கு நெருக்கமாக வருவதாக நம் முன்னோர்கள் கணித்தார்கள்
மனிதர்கள் பிறக்கும் போது பிறந்தநாளை நக்ஷத்திரகள் கொண்டு அளப்போம் , ஆனால் இறப்பை திதி (இது சந்திரனின் ஓட்டமான பௌர்ணமி அம்மாவசை கால அளவு ) கொண்டு அறிகிறோம் .
நம் முன்னோர்கள் இறந்தவர்கள் பிதுர் உலகையும் சந்தரனையும் இணைத்து அறிந்தார்கள்.
மனிதர்கள் பல பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை சனாதன தர்மம் அறிவிக்கிறது ..
மனிதன் முக்கியமாக பிறக்கும் போது மூன்று உடலை பெறுகிறான் ..
பொருள் உடல் (physical body) சூக்ஷும சரீரம் (astral body) , இதை சார்ந்து இருக்கும் ஜீவன் (கர்மத்தால் சூழப்பட்ட சுத்த சத்துவமான ஆன்மா ) இதை காரண சரீரம் என்கிறார்கள் (பாவ புண்ணி யத்தின் காரணமாக பிறப்பு என்பதால் )
இதில் ஜீவன் தனது பாவ புண்ணியங்களை சுமந்து பல பிறவிகளை எடுக்கும் !!
உடல் மற்றும் சூக்ஷும சரீரம் , இறப்பிற்கு பிறகு ..... உடல் பூமியில் அழிக்கப்படும் (எரியூட்டி , புதைத்தும் ) சூட்சுமம் சரீரம் .. இதில்தான் நமது அறிவு ஆற்றல் திறமை (இது அந்த பிறந்த குடும்பத்தின் DNA ) மறுபடி பிதுர் உலகமாம் சந்திர உலகை சென்று அடையும்
நான் முன்னமே எழுதி இருப்பது போல இந்த சூக்ஷும சரீரம் ரஜினி பாட்சா பட டிரஸ் போல அந்த சினிமா கம்பெனி ஆபீசில் மட்டுமே இருக்கும் ... அதாவது பிதுர் உலகில் இருக்கும் , அந்த சினிமா கம்பெனி வேறு ஒரு படத்தில் சில பல மாற்றங்கள் செய்து வேறு படத்தில் பயன்படுத்தி கொள்வர் ..
உங்க தாத்தா இப்படிதான் அருமையா இங்கிலீஷ் பேசுவார் என்று உங்க பாட்டி சொல்வதை போல .. முழுமையாக இருக்காது.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு. பித்ருக் கடன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு.
தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும், சுற்றத்தாருக்கும், உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘ஆத்மக் கடன்’ என்றும், தனது குலதெய்வத்திற்கும், விருப்ப தெய்வத்திற்கும், கோவில்களில் இருக்கும் தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘தெய்வக் கடன்’ என்றும், தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மூன்று கடன்களில் பித்ரு கடன் தான் மிக முக்கியமானது. நம்முடைய உடலையும், உயிரையும் கொடுத்தது நமது பெற்றோர். எனவே ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை இறந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் அவர்கள் இறந்த திதியன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். ‘சிரார்த்தம்’ என்ற வடமொழிச் சொல்லுக்குச் ‘சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் செயல்’ என்பது பொருளாகும்.
சிரார்த்தம் என்பது முன்னோர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், மரபு வழியினருக்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் என்று பொருள்.
நன்மை தரக்கூடிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு செயல்கள் யாரை நினைத்துச் செய்கின்றோமோ, அவர் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். இல்லை, பூலோகத்தில் நமக்கு அருகிலேயே கூட இருக்கலாம்.
அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ அல்லது உயர்ந்ததாகவோ இருக்கலாம்.
நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம்,
அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களின் நிலை உயர உதவும்.
மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இவ் உலக துன்பம் தீர உதவும். எனவே, பித்ரு காரியங்களை ஒவ்வொரு வரும் கடமையாகச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.
அவர்கள் வசுமித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து, தங்களது வாரிசுகள் செய்யும் நற்செயல்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று, தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.
இறந்து போன ஒருவருக்காக அவரது மகன், பேரன், சகோதரன் முதலானவர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும், கோத்திரம் மாறிய பெண் வழி மரபுரிமையினரும் சிரார்த்தம் செய்யலாம்.
சரி .. இதை படிக்கும் உங்களுக்கு அறிவு ஆற்றல் மற்றும் சுக வாழ்வு குடுத்து நடிக்க வைத்து கொண்டு இருக்கும் அந்த சினிமா கம்பெனி முதலாளி (பிதுர் உலக பெயர் அறியா தலைமைகள் ) உங்கள் வீட்டுக்கு வரும் பக்ஷம் (15 நாட்கள் )
கண்ணாடியில் நம்மை பார்த்தும் , நாலு பேரு நம்மை ஒரு செயலுக்கு பாராட்டும் பொது பெருமைப்படும் அனைத்தும் அந்த பிதுர்களையே முழுமையாக சாரும் !!!
எனவே .................. வேலை குடுத்து உடை குடுத்து சோறு போட்டு புகழ் வாங்கி குடுக்கும் முதலாளி முன்பு எப்படி நடக்க வேண்டும் என முடிவு எடுத்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment