Saturday, July 1, 2017

விஜய் டிவி வரலாற்று பின்னணி


1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால்,கோல்டன் ஈகிள் டெலிவிசன் நெட்வொர்க் (GEC) என்ற பெயரில் தொடங்க பட்ட, தொலைகாட்சி நிறுவனம் , பின்பு , விஜய் மல்லையாவுக்கு கை மாறி விஜய் டிவியாக உருமாறியது .கோல்டன் ஈகிள் என்ற புகழ் பெற்ற உடையாரின் பீர் மதுவின் பெயரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பின்பு மல்லையா என்ற சாராய சாம்ராட்டிற்கு கை மாறியதும் அவர் இந்த டிவி தன் பெயரிலேயே அழைக்க பட வேண்டும் என்று விரும்பி விஜய் என்று பெயரிட்டார் . 
அதன் பின் பலவிதமான கார்பரேட் காரணங்களுக்காக சேனல் ஃபாக்ஸ்(FOX) நிறுவனத்திற்கு கை மாறியது கை மாறும்போது மல்லையாவின் ஒப்பந்த விதிகளிலேயே எந்த காரணம் முன்னிட்டும் சேனல் பெயர் மாற்ற படக் கூடாது என்பது குறிப்பிட பட்டது . அதன் பின்பு 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் என்பவரின் ஸ்டார் நிறுவன த்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்ப ட்டது. இன்று வரை அது தொடர்கிறது . உபரி தகவல் : உடையாரின் GEC யில் துக்ளக் சோ அவர்கள் CEO வாக இருந்தார் அப்பொழுது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக என் முழு நேர அலுவல் துவங்கியது . 
அதன் பின்பு GECயில் எஸ் வி சேகர் அவர்கள் பொறுப்பேற்றார். சேனல் மல்லையா கைகளுக்கு போன பின்பு ரபி பெர்னார்ட் அவர்கள் பொறுப்பேற்றார் . அதன் பின்பு ஏ எல் மோகன் பொறுப்பேற்றார் . அதுவரை என் பணி விஜய் டிவியுடன் இணைந்து இருந்தது . சென்னையில் செகன்ட் லைன் பீச் ரோட்டில் உள்ள மெக்டோவல் ஹவுஸ் என அழைக்க படும் அலுவலகத்தில் தான் மல்லையாவுக்கு கை மாறிய பின் விஜய் டிவி சேனல் அலுவலகம் நடந்தது. அதே அலுவலகத்தில் அதற்கு முன்பு UB petro products எனப்படும் மல்லையாவின் அலுவலகம் இருந்தது அங்கு விஜய் மல்லாவை சந்தித்து இருக்கிறேன் limestone எனப்படும் சுண்ணாம்பு கற்களை UB petro products க்கு சப்ளை செய்யும் முக்கியமான கம்பெனிகளில் நான் மார்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த Bansal Chemline pvt ltd நிறுவனமும் ஒன்று அந்த சமயத்தில் நான் வேலை பார்த்த Bansal Chemline pvt ltd என்ற கம்பெனி சார்பில் விஜய் மல்லையா அளித்த பிசினஸ் லஞ்ச்சில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு இருக்கிறது . 
சில விசயங்களை மக்கள் புரிந்து கொள்ளுவதே இல்லை . மல்லையா நம் நாட்டை பொறுத்தவரை தேடப்படும் குற்றவாளி . இன்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றி கொண்டு , வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன . UB petro products ltd ன் இன்றைய பெயர் Spic Organics Ltd. நிறுவனங்கள் பெயர்களை மட்டுமே மாற்றி கொண்டு மாறி மாறி தங்களது கார்பரேட் ஒப்பந்தங்களை மட்டுமே மாற்றி எழுதி கொள்கின்றன . மக்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டு , கருத்து காளமேகமாக மாறி , சோசியல் மீடியா வைரல்களாக பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர் . அது காசு மேல காசாக மாறி மழையாக பொழிகிறது . விஜய் டிவி சம்பாதிக்கிற பணம் இந்தியாவுக்கு சொந்தமல்ல .
Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment