Tuesday, June 6, 2017

இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்


இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம் அவர்களின் 92 வது பிறந்த நாள் இன்று 05.06.2017என் தமிழ் ஆசான் தமிழ் மீதான காதலை ஏற்படுத்தி வாசிப்பு அனுபவத்தையும் பழந்தமிழ் இ...லக்கியம் உலக இலக்கியம் எல்லாவற்றையும் நான் அறிய திறவுகோலாய் இப்போதும் எனக்குள் என் நினைவுகளில் சிம்மாசனமிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை.
என் கையயைப் பிடித்து இந்த வழி போ என தடமிட்டு தந்த ஆசான் .
மண் மணம் செறிந்த எழுத்துக்களைத் தந்து ஈழத்து இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த படைப்பாளி.
சிறுகதை
நாவல்
நாடகம்
உரைச்சித்திரம்
கவிதை
உரை
என எல்லாம் கைவரப் பெற்ற புலமையாளன் .திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு படைப்பாளியாய் கொட்டியாரத்துக்கு பெருமை சேர்த்த இலக்கிய நாயகன்.
இவர் எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் கொட்டியாரத்தின் அழகை தித்திக்க தித்திக்க தேன் சுவை சொட்ட எடுத்துச் சொல்லியிருப்பார்.மாவலியாள் இவர் எழுத்துக்களில் கரை புரண்டோடுவாள் கங்கையின் அலயடிப்பும் கொட்டியாரக் குடாக் கடலின் ஆர்ப்பரிப்பும் இவர் எழுத்தாணியில் நடமிடும்.
  1. இவரது தோணி சிறுகதை உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
    ''சந்தானாள் புரவியில்'' மூதூரின் பழைமையயயயும் கொட்டியாரக் குடாக் கடலின் அழகையும் பல சிறு கதைகளில் மூதூரின் கிராமங்கள் பலவற்றின் சிறப்புக்களையும் படம் பிடித்திருப்பார்.
  2. ''ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கிடக்கிறது'' எனும் நாவலில் ஆலங்கேணி எனும் அழகு தமிழ் கிராமத்தை அதன் பண்பாட்டை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
  3. ''கிரவுஞ்சப் பறவைகள்'' எனும் வரலாற்றுப் புதினத்தின் மூலம் வரலாற்று நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு பாடமாக விட்டுச் சென்றுள்ளார்
  4. சேனையூர் மத்திய கல்லூரியில் சிறப்புறு தமிழ் ஆசானாய் பிரதிஅதிபராய் கடமையாற்றி எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.

No comments:

Post a Comment