Saturday, May 6, 2017

விநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

விநாயகர் உருவம் சில ஆன்மிக தகவல்களை உணர்த்தும் வகையில் உள்ளது.
விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருப்பதன் தத்துவம் மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.
விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப்பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
காகவடிவாக வந்து கமண்டல தண்ணீரை தட்டியூத்திய தத்துவம் உணரத்துவது அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது. கமண்டலம் மனித உடல், அதற்குள் இருந்த காவிரிநீர் ஆன்மசக்தி.
ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற பரந்த ஆழமான தத்துவத்தை விளக்குகின்றது.விநாயகரின் பெருவயிறானது, பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதையும் இருபெருங்காதுகள் பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரும் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதையும் பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காகவும் அவர் மடித்து வைத்துள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தையும் உணர்த்தி நிற்கின்றன அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன. - See more at: http://www.raasipalan.com/




No comments:

Post a Comment