Sunday, July 31, 2016

ரவிவர்மாவின் ரகசியக் காதலி

“சுஜாதா பதில்கள்” படித்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு கேள்வி :
“ ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா ? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை ?”

சுஜாதா :
“ தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ போன்ற சித்திரம் தமிழ் நாட்டில் வேண்டும். ....

டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் , சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து, அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக, ‘கருப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற ஒரு தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்து விட்டேன்.

ஒரு யோசனை தோன்றுகிறது. ராஜாரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.”
:
# சுஜாதா இப்படி எழுதி இருந்ததைப் படித்தவுடன்
“சும்மா இப்படி சொல்ல மாட்டாரே சுஜாதா...?
யார் அந்த ரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி மாடல் பெண்கள் ?” என்ற தேடுதல் எழுந்தது...

தேடினேன்..பிடித்தேன்..
ரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி
–இரண்டுக்கும் போஸ் கொடுத்த மாடல்.....
ஒரே பெண்தானாம்..!

சுகந்தி என்ற சுகுணாபாய்.
கோவாவைச் சேர்ந்த மஹாராஷ்ட்ரப் பெண்.

ரவிவர்மாவுக்கும் இந்தப் பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக “கிசுகிசு” உண்டாம்..!

இதை வைத்து நாவல் அல்ல .. ..
சினிமாவே செய்து விட்டார்களாம்..!

எது எப்படியோ..?
ரவிவர்மாவின் புண்ணியத்தால் அந்த சுகந்தி என்ற சுகுணாபாய் , சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் அமரத்துவம் அடைந்து விட்டார்.

ஆம்...
நூறாண்டு காலம் ஆனபின்னும் ,
இன்றும் கேரளாவின்
பல வீட்டு பூஜை அறைகளிலும் ,
கோவில்களிலும்
லஷ்மியாக ,
சரஸ்வதியாக
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .....

ரவிவர்மாவின் ரகசியக் காதலி...!

  ஆம் ... காதல் அழிவதில்லை...!


John Durai Asir Chelliah

No comments:

Post a Comment