Saturday, July 30, 2016

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம்


ஏழுதலைமுறைக்கு முன் செய்த
பாவங்களும்,இந்த தலை முறையில்
நீங்கள் செய்த பாவங்களும்,அனைத்தும்
தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்,

எவர் ஒருவர் செய்தபாவங்களும்,
அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப
கிடைப்பது- அவருக்கு ஜாதகப்படி
மோசமான தசா,புக்தி நடக்கும்
காலங்களில்.அல்லது அஷ்டமச் சனி
ஜென்ம சனி நடக்கும் காலங்களில்-
சனி பகவான்,தயவு ,தாட்சண்யமின்றி-
கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம்-
யாரும் சனியோட கடுமையால பாதிக்க
படக்கூடாதுங்கள் கிறதுக்காக ஒரு சித்தர்
பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி
அரிசியாக அல்லது அதை நன்கு பொடி
செய்து சூரியநமஸ்காரம்
செய்துவிட்டு,விநாயகப்பெருமானை
மூன்று சுற்றி சுற்றிவிட்டு அந்த
அரிசியை
விநாயகரைச்சிசுற்றிப்போட்டல்,அதை
எறும்பு தூக்கிச்
செல்லும் அப்படித்தூக்கிச் சென்றாலே
நமது பாலங்களில் பெரும்பாலானனை
நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால்,
அது இன்னும் விசேஷம்.
சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை
எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக
சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்புபின்
எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன்
கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த
பச்சரிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துகொள்ளும்.இப்படி
இரண்டேகால் வருடங்கள் வரை
எறும்புக்கூட்டில் இருப்பதை
முப்பத்துமுக்கோடி தேவர்கள்
கவனித்துக்கெண்டிப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை
மாரும்.அப்படி மாறியதும்,அதன் வலு
இழந்துபோய்விடும்.இதனால்,நாம்
அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு
உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108
பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.
எனவே இது எத்தனை புண்ணியம்
வாய்ந்த செயல் என்று தெரிந்து
கொள்ளுங்கள்.

இதனால், சனிபகவானின் தொல்லைகள்
நம்மைத் தாக்காது.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,
அர்த்தாஷ்டகச்சனி-சனி மகா தசை
நடப்பவர்களுக்கு,இந்த செயல் ஒரு மிக
பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

உடல்,ஊனமுற்றவர்களுக்கு-
காலணிகள்,அன்ன தானம்-அளிப்பது,
மிக நல்லது.


சனிபகவான் குறித்த சில தகவல்கள்

  • புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
  • மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
  • சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் ‘வட திருநள்ளாறு’ என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
  • மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்
  • சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். “உன் பக்தர்களை அண்டமாட்டேன்” என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
  • சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
  • சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

உங்களால் முடிந்த அளவுக்கு,உங்கள்
நண்பர்களுக்கு இதை தெரியப்
படுத்துங்கள்.

No comments:

Post a Comment