Monday, June 13, 2016

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத இடம்

 அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்'' என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?'' என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூசஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா'' என்று பதிலளித்தார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?'' என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்' (-மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைககப்பெற்றது). (பின்னர்) உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைகிறதோ அங்கு நீங்கள் தொழுதுகொள் ளுங்கள்! ஏனெனில்அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்'' என்று கூறினார்கள்

No comments:

Post a Comment