Saturday, May 7, 2016

ராட்சத பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட எல்லோரா கைலாசநாதர் கோயில் (Kailashnath Temple, Ellora)






இது தக்கணத்துக் கோயிற் கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் இதுவும் ஒன்று. பெரியதொரு மலையைக் குடைந்து இவை அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இராஷ்டிரகூட அரசன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இக்கோயில் மலைத்தளி வகையைச் சார்ந்தது. திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கே கொண்டு விளங்குகின்றது. மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலன்றி முழுமையான ஆலயமொன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக விளங்குகின்றது.
எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
இக்கோயில் ஒற்றைக்கல் கோயில் வகையைச் சேர்ந்தது.சிவனின் இருப்பிடமான கைலாசத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியிலிருந்து தொடங்கி செங்குத்தாகக் குடையபட்டுள்ளது. இந்த ஒற்றைகல் கோயிலை உருவாக்க பலநூறு ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென கணக்கிடப்பட்டுஎல்லோரா கோவில் சுவற்றில் காணப்படும் உளிகளின் தடங்களைக் கொண்டு மூன்றுவிதமான உளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தொல்லியல் ஆய்வாவாளர்கள், கருதுகின்எல்லோரா
250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148அடி நீளமும் 62அடி அகலமும் 100அடி உயரமும் உடையது. சைவ மரபிலமைந்த பௌராணிக கதைச்சிற்பங்களை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment