Saturday, April 30, 2016

பின்னணி பாடகி பத்மலதா நேர்காணல்


மோகன்ராஜா அவர்களது இயக்கத்தில், ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த “தனிஒருவன்” திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையில் நெஞ்சோரமா என்று துவங்கும் கண்னால கண்னால பாடலைப் பாடி அனைவரது இதயத்திலும் இடம் பிடித்துள்ள பின்னணி பாடகி பத்மலதா அவர்களைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
ஆரம்ப காலங்கள்
************************
பின்னணி பாடகி பத்மலதா ஹிந்துஸ்தானி இசையினை “மீராசவுர்” அவர்களிடமும், மேற்கத்திய இசையினை “ஆல்பிரட்காந்த்” அவர்களிடமும் பயின்றுள்ளார்.
திரைப்படத்துறையில் பாடத்துவங்கி 14 ஆண்டுகளாக திரையிசையிலும், பக்தியிசையிலும், தனி இசைத்தொகுப்புகளிலும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
கவிஞர் யுகபாரதியின் எழுத்தில் “குருவம்மா” என்ற திரைப்படத்திற்காக தனது முதல் பாடலைப் பாடினார்.
அதன் பின்னர் பல பாடல்களைப் பாடிய இவர்,
"தனி ஒருவன்" திரைப்பட பாடல் மூலமாக திரைத் துறையில் ஒரு அங்கீகாரமும், திருப்புமுனையும் கிடைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த பாடலுக்காக இவருக்கு "வி4" விருது, "பென்ஸ்" விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை “ருத்ரம்” அமைப்பின் சார்பாக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை பெற்றுள்ளார்.
அகில இந்திய வானொலி சார்பாக குடியரசு தலைவரின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
உத்தம வில்லன் திரைப்படத்தின் “காதலாம் காதலாம்” பாடலுக்காக “லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழா” விருதும், “ப்ரெஸ்டீஜ் கோல்ட்” விருதும் பெற்றுள்ளார்.
“உத்தம வில்லன்" மற்றும் "இன்று நேற்று நாளை” பாடலுக்காக “பிஹைன்ட்வுட்ஸ்.காம்” சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை அறிவித்துள்ளது.
பாரதியாரின் கவிதைகளை, “ஜூயிஷ்” இசை வடிவத்திலும், பாரதிதாசன் கவிதைகளை “ப்ளுஸ்” இசை வடிவத்திலும், தமிழின் இனிமை கொஞ்சமும் மாறாமல் பாடியுள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சமுதாய நோக்கோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
“கோ கிரீன்” என்ற பாடலைப் பாடியுள்ளார்.
திரையிசையில் இடம் பெற்ற பாடல்களின் ராகங்கள் மற்றும் உருவான விதம் குறித்து, இவர் ஆஸ்திரேலிய வானொலியில் நடத்திய நிகழ்ச்சி உலகளாவில் இருக்கும் தமிழ் திரையிசை ரசிகப் பெருமக்களை வெகுவாக கவர்ந்தது.
ஹிந்துஸ்தானி, ஜாஸ், ப்ளுஸ், ஜுயிஷ், ரெகெ, ஹிப்-ஹாப், சாம்பா, வால்ட்ஸ், ராக் அண்ட் ரோல் போன்ற பல்வேறு இசை வடிவங்களைப் பயின்று தனியாக இசையமைக்கும் திறமையும் கொண்டுள்ளார்.
இசையமைக்கும் திறமை தன்னிடம் இருந்தாலும் தனது முழு கவனமும் பாடுவதிலேயே செலுத்துகின்றார்.
இவர் பாடிய பாடல்கள்
கண்ணாலே - தனி ஒருவன்
அருவாக்காரன் - குட்டிபுலி
காதலே காதலே - இன்று நேற்று நாளை
அடியே அழகே - ஒருநாள் கூத்து
காதலாம் - உத்தம வில்லன்
சில்லென்ற - திருமணம் என்ற நிக்கா
ஏதேதோ எண்ணம் – அமரகாவியம்
மாயா - அரண்மனை 2
இனிக்க இனிக்க - நையாண்டி
பயணங்கள் - ஆரஞ்சு மிட்டாய்
ஓம்காரம் – சந்திரா
பத்மலதா விபரங்கள்
****************************
பெயர் : எம். பத்மலதா
பிறந்த தேதி : 15.08.1986
தந்தையின் பெயர் : முத்துஸ்வாமி
படிப்பு : பி.காம்
பின்னணி பாடகி பத்மலதாவின் முதல் மேடை
*************************************************************
பின்னணி பாடகி பத்மலதா நான்கு வயதாக இருக்கும் போது, “லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவில் “ நின்னுக்கோரி வர்ணம் “ என்ற பாடலை வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அவரது உறவினரின் திருமண நிகழ்வின் போது பாடினார்.
இந்நிகழ்ச்சியே பத்மலதாவின் முதல் மேடை நிகழ்ச்சி என்பதை பத்மலதா மகிழ்ச்சியோடும், பெருமையோடும் நம்மிடம் தெரிவித்தார்.
பல திறமைகளோடு வளர்ந்து வரும் பின்னணி பாடகியின் முதல் மேடை எமது "லஷ்மன் ஸ்ருதி" என்பதை எண்ணி நாமும் பெருமிதம் அடைகின்றோம்.
மென்மேலும் பல பாடல்களைப் பாடி சாதனைகள் பல படைத்து உலகை வலம்வர பத்மலதா அவர்களுக்கு “லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment