Tuesday, February 9, 2016

லூயி மாலின் மதராஸ் Phantom India (Louis Malle)


பிரெஞ்சுசினிமா இயக்குனரான லூயிமால் (Louis Malle) இந்தியா பற்றி ஆறு மணி நேரம் ஒடக்கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியிருக்கிறார்,
1969 ஆண்டு வெளியான என்ற இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்
Things Seen in Madras” என்ற ஐம்பது நிமிசங்கள் ஒடும் காட்சிகள் தமிழகம் குறித்த அரிய ஆவணப்பதிவுகளாகும், குறிப்பாக மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின்  அறுபத்துமூவர் தேரோட்டம், சோவின் துக்ளக் நாடகத்தை நேரில் கண்டு, இளமையான சோவுடன் நடத்திய நேர்காணல், குடும்பக் கட்டுபாடு குறித்த பிரச்சாரம் நடைபெறும் விதம், கலாஷேத்ராவின் நடனக்கலை எனச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இந்த டாகுமெண்டரியில் இடம் பெற்றுள்ளன.
1968ம் ஆண்டு தமிழ்சினிமாவுலகம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள லூயி மால், தில்லான மோகனாம்பாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று சிவாஜி பத்மினி சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கபடுவதைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
படப்பிடிப்பில் சிவாஜி, பத்மினி இருவரும் தயார் ஆகும் விதம், நடிப்பில் சிவாஜி காட்டும் ஈடுபாடு, இயக்குனரான ஏ.பி.நாகராஜன் தாளகதியுடன் கைதட்டிப் பாடி நடிகர் வெளிப்படுத்த வேண்டிய பாவத்தைக் காட்டும் தனித்துவம் என்று  காலத்தின் அழியாத நினைவுகள் காட்சிகளாக ஒளிர்கின்றன
லூயி மால் தமிழக வாழ்க்கை குறித்தும், சினிமா உருவாக்கம் குறித்தும் பேசுவதில் உள்ள கேலியும் வியப்பும் இன்றைக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது,

Thanks
http://www.sramakrishnan.com/

No comments:

Post a Comment