Monday, December 14, 2015

தமிழ் மொழி




தமிழ் மொழியின் பழமையை சொன்னால் கேட்பவர் தமிழராக இருந்தாலும் கூட நம்புவதற்கு சிறிது தயக்கம் காட்டுவது தான் இங்கே நிகழ்கிறது. கேட்பவர்களில் நிறைய பேர் மனதில் தவறாக இருக்குமோ? அல்லது பொய்யாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுவதும் பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உலகின் பழமையான மொழி என்ற பெருமையை பெறுகிற மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து செத்த மொழியாகி விட்டன. ஆனால் இந்த செத்த மொழிகளினும் பழமை கொண்ட தமிழ் மட்டும் இன்றும் இளமையுடன் சீரும் செழுமையும் கொண்டு சிறந்து விளங்கினாலும் ஏன் இந்த நிலமை. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய மொழி மீதான மோகத்தினை உண்டாக்கி வைத்திருக்கும் சூழலே இதற்கு காரணம். தமிழின் பெருமையை இவர்களுக்கு புரிய வைக்கும் செயலில் எற்பட்டிருக்கிற தொய்வும் மற்றொரு காரணம். இன்றைய குழந்தையிடம் ஐந்து என்று சொன்னால் fiveவா என்று ஆங்கிலத்தில் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டுதான் புரிந்து கொள்கிறது. இது தான் இன்றைய யதார்த்த நிலை. இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழின் பெருமையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அபோது தான் நிலமையில் மாற்றம் கொண்டுவர முடியும். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழிலிருந்த ஒரு நடைமுறை இன்று வழக்கொழிந்து விட்டது. அது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். சில சொற்கள் சுருக்கு வடிவத்தில் (short form) பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று அது எத்தனை பேருக்கும் தெரியும் என்று தெரியவில்லை. படத்தில் காணப்படுகிற அட்டவணையை பாருங்கள். அட்டவணையில் கண்டவாறு சுருக்கு வடிவங்கள் பயன்பாட்டில் இருந்தன.
1ல் நாள்
2ல் மாதம்
3ல் வருடம்
4ல் பற்று
5ல் வரவு
6ல் மேற்படி
7ல் ரூபாய்
8ல் எண்ணம்
இப்படி நம்மால் அறியப்படாத எத்தனையோ தமிழில் புதைந்து கிடக்கின்றன அதன் பெருமையை முழுமையாக புரிந்து கொள்ளாப்படாமலேயே.




No comments:

Post a Comment