Wednesday, November 4, 2015

சிலம்புக்கலையின் சிகரம் இன்று சரிந்தது


-----------------------------------------------------------------
சிலம்புக்கலையை கட்டிக்காத்து வந்த செ.சுகுணசேகரம் இன்றுகாலமானார். கட்டைபறிச்சான் கிராமத்தில் 42 வருடங்களாக தனது வீட்டுச் சூழலில் இலவசமாக சிலம்புக்கலையை பயிற்றுவித்து வந்த சுகுணசேகரம் இன்று (04.11.2015) சுகயீனம் காரணமாக காலமானார். 1946ம் ஆண்டு நான்கு சகோதரர்களுடன் பிறந்த இவர் சிலம்புக்கலையின் மீதுள்ள ஈர்ப்பினால் இந்தியாவைச்சேர்ந்த ஒருவரிடம் இக்கலையை முறைப்படி பயின்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் 1973ம் ஆண்டில் இருந்து இக்கலையை பயிற்றுவித்து பலரை இக்கலையில் மிளிர வைத்தார். சிலம்பு மாத்திரமன்றி கராத்தேயிலும் இவர் கைதேர்ந்தவராவார்.

எமது சமூகத்தால் கவனிக்கப்படாத கலைஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர் எனினும் இவருடைய நேர்காணலை கடந்த வருடம் வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது இதன் பின்னர் இவருக்கு கலாபூசனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் சரியான நபரை கௌரவித்தோம் என்ற பெருமையுடன் இவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

No comments:

Post a Comment