Monday, October 19, 2015

சினிஸ்டர் (SINISTER):

True crime writer Ellison Oswalt (Ethan Hawke) arrives in a small town with his wife (Juliet Rylance) and two kids -- Trevor (Michael Hall D'Addario) and Ashley (Clare Foley) -- in tow, preparing to work on his latest book. He's writing about a family of four that was murdered, hung simultaneously from a tree, after which the youngest daughter disappeared. Unfortunately, Ellison has chosen to move into the murder house itself, where he finds a box of Super 8 films that depict the actual murder, as well as several others. As he pieces the puzzle together, strange and terrifying things begin to happen. Ellison's life becomes a race to finish the book before he and his family become too deeply involved in a deadly situation.
Theatrical release date:October 12, 2012
DVD release date:February 19, 2013
Cast:Ethan Hawke, Fred Dalton Thompson, Juliet Rylance
Director:Scott Derrickson
Studio:Summit EntertainmentGenre:
HorrorRun time:110 minutes
MPAA rating:R
MPAA explanation:disturbing violent images and some terror







தொடக்க காட்சியிலேயே ஒரு மரத்தின் நீண்ட கிளையில் வரிசையாய் நான்கு பேர் முகம் மறைத்து தூக்கில் தொங்க தயாராக இருக்கிறார்கள்.மெதுவாக கயிறு இறுக்கப்பட்டு கால்களை உதைத்து துடித்து இறக்கிறார்கள்.இப்படி தொடங்கும் படம் இது.

நாயகன் ஒசவல்ட் ஒரு எழுத்தாளன் .ஒரு வெற்றிகரமான புத்தகத்தால் உலகிற்கு அறியப்பட்டவன்.அதன்பின் எழுதியவை எல்லாம் தோல்வி அடைய,இழந்த பேரை மீண்டும் மீட்க விரும்புகிறான்.அவன் மனைவியோ அவனை வேறு வேலைகளுக்கு செல்ல கேட்டுகொள்கிறாள் .அவன் பிடிவாதமாக எழுத்திலேயே இருக்கிறான்.இந்த நிலையில் காவல் துறையால் இன்னும் முழுதும் முடிக்கமுடியாத கொலைகள் நடந்த அந்த வீட்டிற்கு குடி வருகிறான்.அவன் வீட்டின் வெளியில் உள்ள மரத்தில் தான் தொடக்க காட்சியில் வந்த தூக்கு நடந்த இடம்.ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் தனிமையான வீடு அது.
அவனுக்கு ஒரு மகன் ,ஒரு மகள்.அவனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லை.அவனும் இந்த புதிய கதை எழுதி முடித்ததும் மீண்டும் பழைய வீட்டிற்க்கே போய் விடலாம் என்று சொல்கிறான்.அன்று இரவு சாமான்களை அடுக்க வீட்டின் மேலுள்ள தளத்திற்கு செல்கின்ற அவன் அங்கே ஒரு அட்டை பெட்டி .அதில் சில பிலிம் ரோல்கள் ,ஒரு ப்ரொஜெக்டர் போன்றவை இருக்கின்றன .இரவு எல்லோரும் உறங்கிய பின் அவன் அவனது அறையில் அந்த பிலிம் ரோல்களை ஓட விடுகிறான்.அவை SNUFF FILM வகையாறக்கள் .
அந்த படங்களில் நான்கு குடும்பங்கள் தனித்தனியே பல முறைகளில் கொல்லபடுவதை பார்த்து உறைகிறான்.கடைசியாக அவன் பார்க்கும் கொலை அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் நான்கு பேர் தூக்கில் தொங்குவது .இவற்றை பார்த்ததும் இதில் உள்ளவற்றை ஆராய்ந்து அதை கதையாக எழுதி மீண்டும் வெற்றி பெற நினைக்கிறான்.மீண்டும் மீண்டும் அவற்றை ஓட விடுகிறான்.யார் இந்த படங்களை எடுத்தது? அந்த படத்தில் இருக்கும் சிறுமி என்ன ஆனால்? என்று பல கேள்விகள் அவனுள் எழுகின்றது.
எல்லா கொலைகளிலும் ஒரு பயங்கரமான உருவம் எங்கோ ஒரு இடத்தில இருப்பதை கண்டு பிடிக்கிறான்.அந்த முகத்தை பிரிண்ட் எடுத்து கொள்கிறான்.போலீசை அழைக்கும் ஒஸ்வல்ட் அவரிடம் தான் கண்டுபிடித்ததை சொல்கிறான்.1960 களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் பல்வேறு காலங்களில் இது போல் கொலைகள் நடந்துள்ளதாக சொல்கிறார் போலீஸ்.மேலும் எல்லா கொலைகளிலும் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் காணமல் போகிறது என்றும் சொல்கிறார்.
சில நாட்கள் கழித்து ஒரு இரவு ,அவர் அறையில் இருந்து சத்தம் .பார்த்தால் என்ன? சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம்.
அந்த இரவே அந்த படங்களை கொளுத்தி விட்டு அவசரமாக குடும்பத்தோடு வீட்டில் இருந்து காலி செய்து வேறு இடம் சென்று விடுகிறான் .புதிய வீட்டில் இருக்கும் ஒஸ்வல்ட் அந்த போலீஸ் அதிகாரி மூலம் சில உண்மைகள் அறிகிறான்.அது என்ன? இறந்த 4 குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ? வீடு மாறியுள்ளதால் இப்பொது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்து என்ன? புதிய வீட்டிலும் அவனுக்கு ஒரு அட்டை பெட்டியில் சில பிலிம் ரோல்கள் .அதில் தொடர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது .அவற்றை ஓடவிட்டு பார்க்கிறான். என்ன பார்க்கிறான்?
ஒளிப்பதிவு முழுக்க முழுக்க இருளிலே ஒரே வீட்டிலே எடுத்திருக்கிறார்கள். நிறைய திரில்லர் படம் பார்த்தவர்களுக்கு இதன் ஒளிப்பதிவு புதிதாக தெரியாது.
காட்சிகளை விட இசை நிறைய இடங்களில் பயமுறுத்தியது. இறுதி காட்சியில் நம்மை பயமுறுத்த இசையின் பங்கு அதிகம்.
இரவில் தனியாக பாருங்கள் நான் சொல்வது புரியும்
கா.அருண் பாண்டியன்.

No comments:

Post a Comment