Tuesday, June 9, 2015

காமராசர் தூய்மை, வாய்மை, நேர்மை

கற்பனையிலும் இப்படி ஒரு தலைவரை இனிக் காண்போமா???
இன மொழி எல்லைகளை கடந்த எல்லோர் மனதிலும் இடம் பிடித்த விசித்திரங்களின் விசித்திரம் அவர். விழிகளை வியக்க வைத்த வரின் விழிகள் மூடி விட்டன. அவரின் கடைசி நாட்களை கவியரசர் கண்ணதாசன் ,
தங்கமே, தென்பொதிகை சாரலே
சிங்கமே என்றழைத்து
சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை
துணையிருக்க மங்கையில்லை
துயமணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டி கையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே காமராசா..”

என்று கவிதைகளால் கண் கலங்கினார்.
தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்கள் இருக்கும் வரைக்கும் கர்மவீரர் காமராசர் பெயர் நிலைத்திருக்கும்.
காமராசர் உயிர் பிரிந்தபோது அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்காரன் எடுத்துக்கொண்டான்....
பயனம் செய்த காரை காங்கிரஸ் அலுவலகம் எடுத்துக்கொண்டது.
உடலை நெருப்பு பற்றிக்கொண்டது...
அவரது மகத்தான வாழ்வை வரலாறு எடுத்துக்கொண்டது...

No comments:

Post a Comment