Tuesday, May 26, 2015

கிழமைகள்... பலன்கள்... பரிகாரங்கள்... செவ்வாய்க்கிழமை!


செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.
நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
வளம் தரும் கிழமை: வியாழன்
பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.-வெ.சுப்ரமணியன்

No comments:

Post a Comment