Wednesday, March 18, 2015

திருநீறு (விபூதி) பூசுவதால் விளையும் நன்மைகள்:-


நீறில்லா நெற்றி பாழ்’ என்பது நாம் அனைவரும் அறிந்த பேச்சு வழக்கு. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பந்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும்.
திருநீரால் விளையும் நன்மைகள்:-
திருநீறு வீட்டில் இருந்தால் அதன் மூலம் தடுக்கப்படும் வியாதிகள் அநேகம் என்பதை டாக்டர். கணபதி ஆவணப்படுத்துகிறார். அவற்றுள் சில:
தலைவலி நீரேற்றம் தலைப்பாரம் இவற்றிற்கு திருநீற்றை வெளிப்புறம் பூச வேண்டும்.
பல்வலி, ஈறில் இரத்தம் படித்தல் இவற்றுக்கு திருநீர்ருடன் சூடம்(கற்பூரம்) கலந்து பல்துலக்க வேண்டும்.
எலும்புத்தேய்மானம், உடல் எலும்பு வளர்ச்சி இன்மை, குழந்தைகளுக்கு பற்கள் திடீரென்று விழுதல், சளி, வறட்டு இருமல் இவற்றுக்குத் திருநீற்றை தேனுடன் 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை உண்ணலாம்.
நீர்க்கட்டு, நீர் எரிச்சல் இவற்றுக்கு இளநீருடன் திருநீற்றைக் கலந்து கொடுக்கலாம்.
திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது.
நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.
விதிப்படியமைந்த திருநீற்றை உட்கோண்டால் உடம்பின் அசுத்தங்கள் அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.
மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கப்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.
எந்த பொருளை சுட்டாலும் அது கரியாகி பின்னர் சாம்பல் ஆகும். சாம்பலை மேற்க்கொண்டு எரிக்க முடியாது. இதன் மூலம் இது வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறது. முடிவில் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பல் ஆகும் நியதியை இது சுட்டிக் காட்டுகிறது.

No comments:

Post a Comment