Tuesday, February 3, 2015

நான் யார்...நான் யார்?


அறிவியல் உலகில் DNA கண்டுபிடிப்பு ஓர் மைல்கல். அது ஏராளமான அறிவியல் தகவல்களை, முக்கிய மாக மனித இனத்துக்கு தேவையானவற்றை, மனிதனின் நோய்க்காரணிகளையும் ,அது தீர்ப்பதற்கான வழிகளையும் சொல்கிறது. இரண்டு நாளைய்க்கு முன்னர் நிகழ்ந்த கண்டுப்பிடிப்பு அதைவிட அருமையான ஒரு விஷயத்தை கூறியுள்ளது. அமெரிக்க எடின்பரோ பலகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டி.என். ஏ கடிகாரம், இயற்கையின் ஓர் அற்புதமான புதிரை அவிழ்த்துவிட்டதாக கூறுகின்றனர்.
பொறந்தபோது..!
உலகில் பொதுவாக உலவி வரும் பழமொழி:"உலகத்தில் பிறந்த மனிதன் ஒரு நாள் இறக்கப் போவது உறுதி.அது எந்த நாள் என்று தெரியாததுதான்..இயற்கையின் விந்தை.. புதிர்" என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இன்று அந்த புதிரின் முடிச்சு லேசாக தளர்ந்துள்ளது... அது என்ன தெரியுமா? அதுதான் நாம் எப்போது இறப்போம் என்பதை நிரணயிப்பதை
சக்கைப்போடு போடு ராஜா..!
டி.என்.ஏ என்பது ஒருவரின் மரபணு மற்றும் பரம்பரை பற்றிய தகவல்கள . இதனை பரம்பரையின் ஜாதகம் என்று சொல்லலாமா? இது ஒருவரின் அனைத்து உடலியல் மற்றும் பரம்பரை விஷயங்களை அப்படியே பிட்டு பிட்டு வைக்கிறது. யார் ஏமாற்றினாலும், டி.என். ஏ ஏமாற்றாது.டி.என். ஏ மூலம், குழந்தையின் தந்தை யார், தாத்தா பாட்டி யார். அவர்களுக்கு என்ன வியாதி இருந்தது என்ற உண்மைகளும் கூட கண்டுபிடிக்கப்படுகின்றன நண்பரே. உதாரணமாக, மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்தில்,இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரின் பரம்பரையின் வேர்.என்பது, அதான்பா அவரின் கொள்ளு, எள்ளு..பாட்டிக்கு முன்னர்தான். சுமார் 70,000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க காடுகளிலிருந்து புறப்பட்டு, கடற்கரையோரமாகவே நடந்து ..(அப்பெல்லாம் பேருந்து, தொடர்வண்டி, விமானம் என்று நினைக்க் முடியுமா?) மனித இனத்திலிருந்து பிரிந்து வந்த ஒருவர் இங்கு வந்து தன பரம்பரையை விருத்தி செய்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை அறியப்பட்டது. . அவரிடம் உள்ள மரபணு “M130″DNA. என்பதையும் இது தொடர்பாக ஆய்வு செய்த மரபணு பேராசிரியர் முனைவர். பிச்சையப்பன் கண்டுபிடித்துள்ளார்.
உன் காட்டுல மழை..!
அது போலவே இன்றும் ஒரு வியத்தகு கண்டுபிடிப்பு நிகழ்நதுள்ளது.டி.என்.ஏ விலுள்ள உயிரியல் கடிகாரம், மனிதர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள். குறிப்பாக ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதையும் துல்லியமாக சொல்லிவிடும் வல்லமை இந்த டி.என். ஏ உயிரியல் கடிகாரத்திடம் உள்ளதாக எடின்பரோ பலகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சோசியம் பாக்கலையோ..ஜோசியம்..!
டி.என். ஏ விடம், நம் வாழ்நாளில் ,காலப் போக்கில் ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் மூலம், இவை எவ்வளவு காலத்தில் ஏறப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதையும் அறிய் முடியும் என்கின்றனர். இந்த அற்புதமான அரிய கண்டுபிடிப்பை, இவர்கள் 2015 ஜனவரி 30 ம் நாள் வெளியிட்டுள்ளனர்(Genome Biology, 2015; 16 (1) DOI: 10.1186/s13059-015-0584-6). பொதுவாக மக்களின் உயிரியல் வயது.அவர்களின் உண்மை வயதை விட அதிகமாக இருந்தால், அவர்கள் விரைவில் இறப்பை தழுவுவதாகவும், இரண்டும் சமமாக இருந்தால், அப்படி நிகழ்வதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது.
சும்மா வருமா.. முடிவு...!
ஆராய்ச்சியாளர்கள், சுமார் 5,000 மக்களிடம், தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆய்வு செய்த்ததின் அடிப்படையில் , அதன் விளைவாக சில் உண்மைகள் தெரிய வந்துள்ளன.மனிதர்களின் உண்மை வயதையும், ஆய்வாளர்கள் முன்கூட்டியே இது தொடர்பாய் கணித்த வயதையும் ஒப்பிடும்போது சில முக்கியமான ஒப்பீடுகளை அறிந்தனர். மேலும் ஒருவரின் உயிரியல் சார்ந்த வயது என்பது,அவரது இரத்த சோதனையிலிருந்து கூட அறிய முடியுமாம். இது எப்படி இருக்கு? நமது இரத்தம். நாம் எவ்ளோ.. நாள் வாழப்போகிறோம் என்ற பரம ரகசியத்தை சொல்லுமா.?.நமக்கு மட்டும் ரகசிய பரிமாற்றம்தான்.சொல்லுமாம்..? தயவு தாட்சண்யமின்ற சொல்லும் என்று சவால் விட்டு சொல்கின்றன.ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வுகள்.
இறக்கும் நாள் அறியவோ..!/யார் உன்னை இயக்கவோ..
எடின்பரோ மற்றும் ஆஸ்திரேலியா பல்கலைக் கழகங்கள். இணைந்து ஒருதகவலை வெளியிடுகின்றன. சோதனையில் பங்கேற்றவர்களை தொடர்ந்து கண்காணித்தனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த அற்புதமான தகவல் :வேகமாக காலச் சக்கரத்தை இயக்கம், உயிரியல் கடிகாரம், வேகமாக சுழலும்போது, இறப்பு சீக்கிரம் வருகிறது என்பதற்கும் இணைப்பு பாலம் உண்டு, அதுபோல, புகைபிடித்தல், சரிக்கரை வியாதி மற்றும் இதய வியாதிகள் மூலமும் வாழ்நாள் குறைவது தெரிய வந்துள்ளது.எடின்பரோ ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா, அமிரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை செய்த ஆய்வுகள் மூலமும், டி.என். ஏ வின் வேதிமாற்றம், குறிப்பாக மெதிலேஷன்(methylation) மூலம் ஒருவரின் வாழ்நாளை கூறமுடியும்.என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். . இந்த சிறு மாற்றம், டி.என். ஏ அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது. ஆ னால் முக்கியமாக, உயிரியல் செயல்பாடுகள் எப்படி தூண்டப்படுகின்றன. எப்படி மரபணுக்களின் செயபாட்டை எப்படி நிறுத்துகின்றன.. துவங்குகின்றன என்ற சூட்சும சிக்னலின் இயக்கத்தை (ON & off technique) இதில் அறிய வைக்கின்றன.என்பதெல்லாம் இதில் அத்துப்படி. மெதிலேஷன் மாற்றம் என்பது, நிறைய மரபணுக்களில் மாற்றம் செய்கிறது.ஒரு முறை ஏற்பட்ட மாற்றம், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே நடக்கிறது.
காலத்தை வென்றவன் நீ..!
எடின்பரோ பல்கலைக் கழக பேராசிரயர், வயதாவதின் காரணி தேடும் துறையின், முனைவர் ரிக்கொர்டர் மரியோனி (Dr Riccardo Marioni) சொல்வதாவது: நிறைய ஆய்வுகள் செய்ததின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது. அனைத்து ஆய்வுகளும் ஒரே முடிவைத்தான் தருகின்றன. .உயிரியல் கடிகாரத்துக்கும், அதன் வாழ்நாளுக்கும், இறப்புக்கும் தொடர்பான நோய்க்காரணிகளுக்கும் நேரடி தொடர்பு உண்டென்று அறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் எந்த இடத்தில் மனிதனின் வாழ் நாள், மரபணு காரணிகள, எப்படி உயிரியல் வயதுடன் இணைந்து தூண்டுதல் செய்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரியவில்லை.இதனால் ஏற்படும் புதிய கண்டுபிடிப்பு என்பது மனிதனின் நீண்ட ஆயுளையும்,உடல்நலம் மிக்க நீண்ட வாழ்வியலையும் நீட்டிக்கும் என்பது மட்டும் உறுதி..என தெளிவாகத் தெரிகிறது. ஆனால் வயதாவதை அறிய ஒரு புது யுக்தி கிடைத்துள்ளது என்பது போற்றிக் கொண்டாடக்கூடிய மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்.இதில் மனித குலம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

Mohana Somasundram 

No comments:

Post a Comment