Monday, January 19, 2015

Jallikattu(ஜல்லிக்கட்டு), The Pinnacle of Tamil Culture

Jallikattu (Bull-Baiting or Bull Cuddling/Holding or Bull Taming)

The term jallikattu comes from the term calli kācu (coins) and kattu (meaning a package) tied to the horns of the bulls as the prize money.
"Jallikattu" - is a cattle/ bulltaming sport played in Tamil Nadu as a part of Pongal celebration. This is one of the oldest living ancient sports seen in the modern era. It is held in the villages of Tamil Nadu as a part of the village festival. The festivals are held from January to July, every year. The one held in Alanganallur, near Madurai, is one of the more popular events. This sport is also known as "Manju Virattu", meaning "chasing the bull".
Jallikattu is a traditional bull embracing sport played in Tamilnadu during the months of January to May as a part of Pongal and other temple or Church festivals. With over 4000 years of recorded history, it is one of the oldest sport in the world!
The Sport
Jallikattu is a harmless sport where an unarmed sportsman tries to embrace the bull for a period of 10 seconds or till the bull crosses the finish line about 50 feet away. If the sportsman successfully embraces the bull by its hump, he is declared the winner. If no one is successful, then the bull is declared the winner.
Safety First
Safety of the bull, sportsmen and spectators are the top priority. Special barricades and galleries are
constructed to ensure safety for the spectators. Government Veterinarians test the bull before and after the event to ensure the bull has not been abused, stressed or harmed in any manner. The sportsmen also undergo a medical fitness test.
History and Culture
‘Jallikattu’ is a rare sport that has been continuously played for thousands of years. A seal made of stone
found at Mohenjodaro, depicts “jallikattu” that was prevalent in the Indus Civilisation. The seal, about 4,000 years old, is on display at the National Museum, New Delhi.
The Sport has become an intrinsic part of the Tamil culture that it has broken all religious and caste barriers. People of all religions, caste and creed participate in this sport. The sport is usually held once a year in a village to celebrate a local temple or church festival. About 30% of the events held during 2013 were organised by christian churches.
Jallikattu Saves Native Cattle Species
Jallikattu is not just a sport! It is inter-twined in the Tamil rural eco-system in many ways than what meets the eye.
The honour of the family bull participating in a Jallikattu is the sole reason for the bull not being sent to the slaughter-house ! Since only local breed of bulls are best suited for the sport, villagers rear bulls of local breeds specifically suited for the purpose.
Every village temple selects a bull as its offical ‘Temple Bull’. The temple bull is essentially the common village stud bull, fed and readred by the whole village. It is allowed to roam free in the village. The temple bull is changed every three years to avoid in-breeding! During Jallikattu the temple bull is given the honour of entering the arena first and, by convention, nobody embraces it.
Myths & Facts

Myths
* Bulls are abused
* Bulls are fed performance enhancers or liquor
* Bulls are ferocious and many people die
* Bulls are beaten to enter into the arena
Facts
* Tamilnadu Government has set very stringent rules and regulations
* Government Veterinarian tests and certifies the bull before and AFTERthe event
* All events are video-recorded
* Bulls are not beaten to enter the arena! They are trained to go to the keeper. Watch the keeper go beyond the 50-feet marker and wave his towel or whistle to let the bull know where he is!
* Not a single sportsman has died since the introduction of the Tamilnadu Jallikattu Act
Animal Rights Activists Got it Wrong !
It is very unfortunate that some animal rights activists equate Jallikattu with bull fights of Spain, Portugal, Argentina etc. where, the bull is teased, tortured and killed! Whereas Jallikattu honours the bull! The bull is not abused in any manner. Government veterinarians certify the bull before and after the event!
The Animal Rights Activists do not consider the contribution of Jallikattu to the rural economy. They do not seem to understand the sport’s contribution to the rural ecology and family structure.
Jallikattu saves the bulls from the slaughterhouses!
Popular Venues and Dates
Every year, the Jallikattu season starts with the world-famous event being held at Palamedu in Madurai District on January 15th, followed by Alanganallur, Avaniyapuram and other places. The season ends by May.
Jallikattu Needs Your Support !
Your Support to save the sport will save our native cattle breeds which are almost extinct, encourage
more rearing of local cattle, give filip to rural economy and retain our rural labour force.
Support Jallikattu; Save Native Cattle !
சிந்து சமவெளி நாகரிகம் தமிழனின் நாகரிகம். அது தமிழனின் நாகரிகம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றான 4000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கட்டு விளையாடியதற்கான ஆதாரம் மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்றுள்ளது. அது தற்போது புதுதில்லி அருங்காட்சியகத்தில் உள்ளது.
-முனைவர் மு.இளங்கோவன்   ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.   பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும். ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.   வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம், 'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும். கலித்தொகை கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது. எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். 'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64) என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது. கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம். காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

Read more at: http://tamil.oneindia.com/

No comments:

Post a Comment