Tuesday, January 27, 2015

பீஷ்மாஷ்டமி


இன்று பீஷ்மாஷ்டமி இந்த பீஷ்மாஷ்டமி அமிர்த சித்த யோகத்தில் வருவது மிகவும் விசேஷம் ! அஸ்வினி நட்சத்திரத்தில் வரும் பீஷ்மாஷ்டமியில் அவருக்கு தர்பனம் செய்வது மிகவும் புண்ணியம் தரும்.
விஷ்ணு அவதாரம் ஆன பரஷுராமரிடம் 27 நாட்கள் போரிட்டு சரிசமமாக பராகிரமம் காட்டி ஈஸ்வரர் அருள் பெற்றவர்.
பீஷ்மர் என்பவர் யாரும் இல்லை இறைவன் படைப்பின் முதல் ஆன வின் மண்டலம் ஆவார் அஷ்ட வசுக்களின் தலைவர் ஆவார். தனது மாயை சாபத்தால் மானிடராக பிரபெடுதவர். மானிடர்களுக்கே சவாலான நயிஸ்டிக பிரம்மச்சரியம் கொண்ட மஹா ஆத்மா அதுவும் ஒரு சில வருடங்கள் அல்ல பல தலைமுறையாக ! அப்படியொரு மானிடர் எவரும் இல்லை ! கங்கை மைந்தர் தேவவிரதர் தேவர்களுக்கும் கடுமையான விரதனாக திகழ்ந்தார்.
ஒரு தேவருக்கு தர்பனம் குடுக்கும் அற்புத வாய்பளிதிருக்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்லும் தருணமாக பீஷ்மாஷ்டமி திகழ்கிறது ! தனக்கென்று வம்சம் என்று இல்லாத இறந்ததால் மக்களாகிய நாம் அவரை இறைவனாக நம் முன்னோராக பாவித்து தர்பனம் குடுக்க வேண்டும். ஆகையால் இந்த வாய்ப்பினை விடாமல் தானம், பூஜை, பக்தி, விரதம், சிரதர்தம், தர்பனம், புண்ணிய அர்பனம் செய்து புண்ணியம் பல கோடி சம்பாரிதிடுங்கள்.

No comments:

Post a Comment