Tuesday, August 5, 2014

பாரதியார் வ.உ.சிதம்பரனார் மோதல்


பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் - முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!
ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத் துக்களும் அப்படியே தமிழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும் பாரதியார் ஞானபாநுவில் எழுதியிருந்தார்.
அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ.சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.
தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும், பல புதுமைகளையும், திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத்துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ. என்னும் எழுத்துக்களையாவது, அவற்றின் ஒலிகளைக் குறிக்கும் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டிகள் ஆவார்கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச்சென்று பதில் அடி கொடுத்தார்.
இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய - திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.
சமஸ்கிருதத்தில் உள்ள ஒலி அமைப்புகளைத் தமிழில் திணிக்க வழி செய்ய வேண்டும் என்று கூறுகிற பாரதியார் யார்? அரவிந்தர் யார்? என்பதையும், அதற்கு மறுப்புக் கூறி எழுதியுள்ள வ.உ.சி.யார் என்பதையும் தெரிந்து கொண்டால் இதனுள் இழையும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார், சமஸ்கிருதம் - தமிழ் இவற்றிற்கிடையே நீண்ட காலமாக இருந்துவரும் மோதலின் நுணுக்கம் என்ன என்பது நுணுக்க மாகவே புரியும்.
சமஸ்கிருத சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு கூடுதல் தகவலாகும்.
குறிப்பு: தமிழில் உள்ள இந்த க,ச,ட,த,ப எனும் எழுத்துக்கள் இடத்துக் கேற்ப இயல்பாகவே ஒலியில் மாற்றம் ஏற்படு வதுதான் தமிழின் தனிச் சிறப்பாகும். குழந்தை என்று சொல்லும்போது எழும் குவின் ஒலிக்கும். தூங்கு என்பதில் வரும் குவுக்கும் ஒலி வேறுபடு வதை ஒரு முறை சொல் லிப் பாருங்கள் வேறுபாடு புரியும்.

No comments:

Post a Comment