Tuesday, July 15, 2014

நீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா? பயர்பாக்ஸ் புது வசதிகள்:-


ஓப்பன் சோர்ஸ் (Open Source) முறை என்று சொல்லப்படுகின்ற திறந்த நிலை சிஸ்டம் வரிகளுடன் அமைக்கப்பட்டது பயர்பாக்ஸ் பிரவுசர். இதனால் இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, பல கணிப்பொறி வல்லுநர்கள், இதற்கான ஆட் ஆன் (Add on) தொகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவற்றினால் பல கூடுதல் வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம். அண்மையில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் தொகுப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் சிறப்பான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

1. மல்ட்டி ரோ புக்மார்க்: நமக்குப் பிடித்த அல்லது நமக்குப் பயன்தரும் இணைய தள முகவரிகளைப் புக் மார்க் (Book Mark) என்ற பெயரில் பயர்பாக்ஸ் பிரவுசரில் பட்டியலிட்டு வைக்கிறோம். புக்மார்க் டூல்பாரில் கிளிக் செய்தவுடன் 20க்கும் மேற்பட்ட தளங்களுக்கான புக்மார்க்குகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் கிளிக் செய்தவுடன், அந்த இணைய தளங்களுக்கு நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் புக்மார்க்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, கூடுதலாக இருப்பவைகள், ஒரு கீழ்விரி மெனுவாக நமக்குக் கிடைக்கிறது. கீழாகச் சென்று கிளிக் செய்தால், மெனு விரிந்து நமக்கு அவை கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக அருகே ஒரு பட்டியல் விரிந்து அவை அனைத்தும் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா! இதற்கென ஒரு ஆட் ஆன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. Multirow Bookmarks Toolbar என இது அழைக்கப்படுகிறது. இதனைப் பெறhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/6937 என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், மெனுவில் புக்மார்க்குகள் சென்று தங்குவதில்லை. வரிசையாகப் பட்டியலிடப்படுகின்றன.

2. யு.எஸ்.பி.யில் பயர்பாக்ஸ்: சென்ற மாதம் ஒரு நாள் அவசரமாக வெளியூர் சென்றிருந்த போது, இணையத்தில் சில தகவல்களைத் தேடி ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றேன். அங்கே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும், குரோம்பிரவுசரும் வைத்திருந்தனர். எனக்கு இவற்றை இயக்குவது தெரியும் என்றாலும், பயர்பாக்ஸ் பிரவுசரில் பழகிவிட்டதால், அது இல்லாதது சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், ஏன் நாம் எடுத்துச் செல்லும் வகையில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பைலை வைத்திருக்கலாமே என்று யோசனை பிறந்தது. அதே நோக்கத்துடன் தேடுகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் என்ற ஒரு புரோகிராம் பைல் இருப்பது தெரிய வந்தது. இதனை ஜான் டி ஹேலர் என்பவர் உருவாக்கி இலவசமாகத் தந்துள்ளார். இந்த பைலின் அளவு 5710 கேபி தான். இதனை ஒரு யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து எடுத்துச் சென்றால், பயர்பாக்ஸ் பிரவுசரை இதிலிருந்தே இயக்கி பிரவுஸ் செய்திடலாம். இதனைப் பெறவும், இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் http://portableapps.com/apps/internet/firefox_ portable என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3. தண்டர்போர்டு போர்ட்டபிள் (Thunderbird Portable): பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும்,மொஸில்லா தரும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். இந்த புரோகிராமும் யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. 5950 கேபி அளவுள்ள பைலில் இது அடங்கியுள்ளது. இதனை யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து இயக்கி பயன்படுத்தலாம்.

4. ஒன் கிளிக் ஆன்ஸர் (One Click Answer): பயர்பாக்ஸ் பிரவுசரில் எந்த இணைய தளத்தில் இருந்தாலும், ஏதேனும் ஒரு சொல்லுக்குரிய பொருள் தெரிய வேண்டுமா? ஒன் கிளிக் ஆன்ஸர்ஸ் என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும். எந்த சொல்லிலும் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால், உடனே Answers.com என்ற தளத்திலிருந்து பொருள் விளக்கம் பெறப்பட்டு ஒரு பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும். இந்த ஆட் ஆன் தொகுப்பைhttp://www.answers.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

5. வண்ணங்களில் டேப்கள்: பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திற்குமான டேப்களை ஒரே நிறத்தில் தான் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக அவற்றை வண்ணங்களில் பார்த்தால் நன்றாக இருக்குமே! ஒன்றுக்கொன்று வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே!! இதற்கான புரோகிராம்http://binaryturf.com/ என்கிற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதுவும் இலவசம்தான்.

6. வெப்சைட் பி.டி.எப். பைலாக: பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா? ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும். அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.

மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1

பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2

மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3

பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4

இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.

உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திடhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

thanks: anbuthil.com

No comments:

Post a Comment