Thursday, June 12, 2014

குடிசனவியலும் சுகாதார துறையில் அதன் தாக்கங்களும்

உலகில் இயற்கையில் நிரந்தரமென்று எதுவுமில்லை இயற்கையின் நியதியில் சகலதும் மாறிக் கொண்டே இருக்கும். இதில் சில மாற்றங்கள் சடுதியானவை வெளித்தெரிபவை. சில மாற்றங்கள் மந்தமானவை உணர்ந்து கொள்ளவது கடினம் சனத்தொகை மூப்படைதல் இதில் இரண்டாவது வகையானது. ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் சனத்தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இளையோரின் எண்ணிக்கை குறைவதை சனத்தொகை முதிர்வடைதல் என குறிப்பிடலாம்.

உலக சனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. சுகாதார மருத்துவ வசதிகள் கூடி மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்தமை, பிறப்பு இறப்பு வீதம் குறைவடைந்து சனத்;தொகையில் இளையோரின் எண்ணிக்கை மேலும் குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகின்றது. தற்போது 60 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை உலக சனத்iதாகையில் 11 சதவீதம் இந்த எண்ணிக்கை 50ஆம் ஆண்டளவில் 19மூ ஆக அதிகரித்துவிடும். சனத்தொகை மூப்படைதலின் விளைவு பொருளாதார, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியாக முதியவர்கள் இளையவர்களிடம் தங்கியிருக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் உழைக்கும் வர்க்கமான இளையவர்களின் எண்ணிக்கை குறைவது பொருளாதார வளர்ச்சியை பாதிப்படையச்செய்கின்றது.

சனத்தொகை வயது முதிர்தல் சுகாதார துறையில் அதிக சுமைகளை ஏற்படுத்துகின்றது. ஏனெனின் முதியவர்களின் சலரோகம், இருதயவியாதி, அதிக இரத்த அமுக்கம் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந் நோய்களுக்கு தொடர்ந்து சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்க வேண்டியிருக்கும். நோயிற்குரிய மருந்துகளை குறைந்தாலோ தவிர்த்தாலோ பலவித பக்க விளைவுக்கு ஆளாக நேரிடும். சலரோக நோயாளி சிபார்சு செய்யப்பட்ட மருந்துகள் எடுக்காவிடின் கண் நிறுநீர பாதிப்பு, கை கால்களில் புண் ஏற்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். இதனால் வைத்திய ஆலோசனையுடன் மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து இலவசமாக சுகாதார பராமரிப்பு சேவைகள் வழங்குவதால்  அதற்கான செலவுகளும் அதிகரிக்கும்.


மேலும் தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் முதியவர்கள் போர் சூழல்காரணமாகவோ, இயற்கை அழிவுகள் காரணமாகவோ கணவன் மனைவியையோ மனைவி கணவனையோ இழந்தோ, பிள்ளைகளை இழந்தோ, பிள்ளைகள் அயல் நாட்டில் இருப்பதாலோ தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உள்ளார்கள். இதன் காரணத்தினால் மன உளைச்சல் உற்பட்டு உளநோய்கள் ஏறபடுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளது. இப்படியான சந்தர்ப்பங்களில் உளவியல் ஆற்றல்ப்படுத்தல் சேவையை நாடுதல் அவசியமாகும். சமூக ரீதியாக ஆராய்தல் சனத்தொகை மூப்படைதல் என்பது இலங்கை போன்ற சமய, கலாச்சாரங்களுடன் கூடிய நாடுகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நோக்க வேண்டிய விடயமாக உள்ளது. இந்த நாடுகள் மூத்தோரை மதிக்கும் கலாச்சாரத்தை அனுசரித்தாலும் நகர மயமாக்கல், குடும்ப சிறுத்தல்; காரணமாக பெரியவர்களின் சுமையாக கருதும் அபிப்பிராயமும் அதிகரித்துள்ளது. ஆயினும் முதியவர்கள் குடும்பத்தில் முக்கியமானவர்களாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் தீர்மானம் எடுக்க உதவுபவராகவும் இளவயது சமூகம் நடந்து கொள்வது அவசியமாகும். இதன் மூலம் இளம் சமூகம் முதியோரை சந்தோஷப்படுத்த முடிகின்றது.
இப்படியாக குடிசனவியல் பல்வேறு தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துவதால் அந்த மாற்றங்களிற்கு ஈடுகொடுப்பதற்கு புதிய சிந்தனைகள் புதிய கொள்கைகள் அவசியமாகின்றது. இந்த மாற்றங்கள் சர்வதேச, தேசிய, உள்ளுர் மட்டத்தில் அறிமுகம் செய்யவேண்டிய தேவைகள் கட்டாயமானவை. மேலும் மூப்படையும் சனத்தொகையை சரியான முறையில் கையாளும் பட்சத்திலும் அவர்களின் அனுபவங்களை சரியான முறையில் பிரயோசனப்படுத்தும் பட்சத்திலும் அவர்களை வள ஆலோசகர்களாகவும் சமூக சேவை முன்னோடிகளாகவும் பிரயோசனப்படுத்த முடியும். மேலும் மூத்தோர் பராமரிப்பு தொடர்பான விளிப்புனர்வுகள், மூத்தோர் நலம் பேணல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கள் மூலமாகவும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்பின் ஊடாக முதியவர்களை சிறப்பான மனித முதலீடாக மாற்ற முடியும் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.      

No comments:

Post a Comment