சித்தமருத்துவம் - தமிழ் மருத்துவம் என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளவேண்டும். ஏனெனில் தமிழர்கள் ஆகிய எமது பண்டைய வழியிலானோரால் உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட்ட எமது பண்டைய மருத்துவமே இன்றைய சித்தமருத்துவம். இது எங்கள் சொந்த மருத்துவம் அதிலும் எமது சொத்து என்றால் மிகையாகாது. அதிலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சிங்கநகரை இராச்சிய கேந்திரமாகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்தி முதல் தமிழ் மருத்துவம் பின்பற்றப்பட்டு வந்தது, யாழ்ப்பாணத்தின் சித்தமருத்துவர்கள் இந்தியாவில் இடம் பெற்ற சித்தமருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்று சித்தமருத்துவம் பல்கலைக்கழகக் கற்கை நெறியளவிற்கு உயர்ந்திருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இந்த சித்தமருத்துவக் கற்கை நெறியில் சித்தமருத்துவம் - பொது, சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். இதில் சித்தமருத்துவம் - பொது என்ற பாடத்தில், பொதுவான நோய்களுக்கான சித்த பரிகாரங்கள் பற்றி கற்பிக்கப்படுகிறது. சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பாடத்திட்டத்தில், சிறப்பான சித்தமருத்துவ சிகிச்சைமுறைகளை திரட்டிக் கற்பிக்கப்படுகின்றன.
அந்தவகையில் சித்தமருத்துவத்தின் சிறப்பான பிரிவு சித்தமருத்துவம் - சிறப்பு (SPECIAL-MEDICINE in Siddha Medicine) இந்த சித்தமருத்துவம் - சிறப்பு என்பதில்: கற்பம், வெறிநோய், வர்மம், தோற்பிணி போன்றவை முக்கியமான விடயங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கற்பம் என்பது காயகற்பம் என்பதாகும். இக்காயகற்பம் (REJUVENATION) (RASAYANAA – Science of
Rejuvenation)என்பது உடம்பான காயத்தை கற்பம் போல் பேணிப்பாதுகாத்தல் ஆகும். காயகற்பத்தில் முக்கியமான மூன்று முறைகள் கையாளப்படும். அவையாவன: காப்பு(Prevention)இ அழிப்பு(Destruction)
நிரைப்பு(Alteration). இதில் நோய் வராமல் உடலைக் காப்பதும், உடலில் ஏற்பட்ட நோயினை அழிப்பதும், உடலிற்குஅவசியமாக வேண்டியவற்றை மீள உடலிற்கு நிரப்புவதுமாகும். இம்மூன்று விடயங்களுக்காகவும்: தனிநபரின் வாழ்க்கை முறையை ஒழுங்கமைத்தலும், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வதும், சரியான கற்பமருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் காயகற்பத்தினை நடைமுறைப்படுத்தலாம்.
இதைவிட காயகற்பமுறைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன: பொதுகாயகற்பம், சிறப்புக்காயகற்பம் என்பனவாகும். இதில், பொதுகாயகற்பம் என்றால்: சாதாரணமாக சுகதேகியான ஒருவர் நோய்வராமல் தடுப்பதற்காகவும், உடலின் அழிவைபின் தள்ளிப் போடுவதற்காகவும் மேற்கொள்கின்ற கற்பமுறைகளாகும். சிறப்புக்காயகற்பம் என்றால்: நோயுள்ள ஒருவர் தன்னிடமுள்ள நோயினை முழுமையாக நீக்கவும், மீண்டும் நோய்நிலைகள் ஏற்படாது தடுப்பதற்காகவும், நோய் தன்மையினால் தனது உடலிலிருந்து அழிவடைந்த அல்லது குறைவடைந்த உடலிற்குத் தேவையான போசணைச்சத்துக்களை மீளநிரப்பும் வகையிலும் உடலின் அழிவைபின் தள்ளிப் போடுவதற்காகவும் மேற்கொள்கின்ற கற்பமுறைகளாகும்.
பொதுவாகக் கற்பமுறைகள்;: மூலிகைக்கற்பம், தாதுப்பொருள் கற்பம், ஜீவப்பொருள் கற்பம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், முப்பு என்பனவாம். இதில் மூலிகைக்கற்பம் என்னும் பொதுசிறப்பான கற்ப மூலிகைகளைக் கொண்டு காயகற்பத்தை மேற்கொள்ளலாகும். இந்தக் கற்பமூலிகைகளைத் தனியாகவோ, பலவற்றைச் சேர்த்தோ உரியமுறையில் தினமும் பயன்படுத்தி வருவதாகும். பொதுவாக கற்பமூலிகைகள் 108 என்று குறிப்பிட்டுள்ளனர். சித்தர் போகர் பிரதானமான கற்ப மூலிகைகளாக 45 மூலிகைகளையே குறிப்பிட்டுள்ளார். அதிகசித்தி மூலிகைகள் என 09 கற்பமூலிகைகளை சித்தர்கள் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதோடு இக்கற்ப மூலிகைகளைப் பயன்படுத்தி தாது, ஜீவப்பொருட்களை கற்பமருந்துகளாக்கிக் கொள்ளலாம். சித்தர்கள் அட்டமாசித்துக்களையுடைய இக்கற்ப மூலிகைகளின் பாவனை அவசியமென்று கூறியுள்ளனர்.
பொதுக்கற்ப மூலிகைகள் (General Rejuvenating Herbs) சில: இஞ்சி, அமுக்கரா, பொன்னாங்காணி, மணத்தக்காளி, கற்றாழை, கரிசாலை, வேம்பு, பிரண்டை....
சிறப்புக்கற்ப மூலிகைகள் (Special Rejuvenating Herbs) சில: கடுக்காய், நெல்லி, எலுமிச்சம்பழம், நன்னாரி, துளசி, வில்வை, கீழ்க்காய்நெல்லி, சேராங்கொட்டை, வெள்ளெருக்கு, நொச்சி......
தாதுப்பொருள் கற்பம்:
அயஜம்பீரக் கற்பம், அய பிருங்கராஜக்கற்பம், தங்க பஸ்பம், பூரணசந்திரோதயம்.
ஜீவப்பொருள் கற்பம்:
தாரோட்டம் (காய்ச்சாத பசுவின் பால்), காய்ச்சியபசுவின் பால், இந்திரகோபப்பூச்சி.
இயமம்,நியமம்:
தூய்மையான சிந்தனைகளுடனான நல்ல ஒழுக்கமுள்ள வாழ்க்கைமுறைமை. அதாவது நல்ல மனஒழுக்கமும், நல்லசிந்தனை, சொல், செயல் கொண்ட வாழ்க்கை நடைமுறை.
ஆசனம்:
இதில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும், நாடி சுத்தியும், யோகப் பயிற்சியில் ஒன்றான யோகாசனமும் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தல்.
முப்பு (UniversalSalt) என்னும் முக்கியமான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது முப்பு, பூநீறு (Fussle’s Earth) என்பன சித்தமருந்துகளை முடிக்கப் பயன்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்றால் அது மிகையாகாது. முப்பு என்பது, மூன்று உப்புக்களின் சேர்க்கை என்றும், மூப்பைத் தவிர்க்கும் உப்பு என்றும் இன்னும் இது மூன்று வகை அதாவது: யோக முப்பு, ஞான முப்பு, வாத முப்பு என்றும் பலர் பல சுவையான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் விளக்கமளிக்கின்றனர் என்ற ஆராயப்பட வேண்டிய விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்து சித்தமருத்துவத்தில் சிறப்பான பிரிவைப் பார்க்கையில், வெறிநோய் எனப் பெயரிட்டிருப்பினும் இதில் வலிப்புநோய் (Epilepsy) பற்றிய நோய் நிதானம், சிகிச்சை என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு உளப்பிறழ்வு (Psychological disorders) சம்பந்தமான மானசீக நோய்கள் பற்றியும் அவற்றின் தன்மையும், வகையும், சிகிச்சிக்கும் கிரிகை முறைகளும், மந்திர உச்சாடனங்களும், சிகிச்சைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உண்மையிலேயே சிறப்பு வைத்தியமுறைகளாகும். பயித்திய நோய் (Mental Diseases)எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், நோயாளியின் நிலைமைக்கேற்ப தலைக்கு எண்ணெயும், மாமிசம் அற்ற உணவுமுறையும், தொடர்ச்சியான மந்திர உச்சரிப்பும், நோயாளியின் கிரக பலன்களுக்கமைய அதற்கான நிவர்த்திப் பரிகாரங்களும் செய்து சிகிச்சையளிக்கும் முறையும் குறிப்பிடப்பட்டது மட்டுமன்றி அந்தசிகிச்சையில் வெற்றி கண்டும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று நம்மிடையே உள்ள சிலரின் பரம்பரையில் அன்றைய காலகட்டத்தில் சிறப்புத் தேர்ச்சியான சித்தமருத்துவர்கள் பயித்தியநோய்க்கு சிகிச்சித்திருக்கிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
அடுத்ததாக வர்மம் பற்றிய சிறப்பான கலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தவர்மக்கலையானது சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட அரிய பொக்கிசமாகும். ஆனால் இன்று இதனை ஆழமாகக்கற்கின்றவர்கள், கற்பிக்கின்றவர்கள் ஒரு சிலரே என்பது திண்ணம். ஆதியான சித்தர் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்ட வர்மக்கலையானது புராதன நாகரிகத்தின் இடப்பெயர்வுகள் காரணமாக சீனாதேசம் சென்று அங்கு புதுப்பொலிவு பெற்று இன்று அது அக்குப்பஞ்சர் என அழைக்கப்படலாம் என்பது எனது கருத்தாகும். வர்மக்கலை பற்றிப் பார்ப்போமானால்: இது வர்மம், வன்மம், மர்மம் என்னும் வேறுபெயர்களால் அழைக்கப்படுகிறது.
வர்மக்கலை வுhயரெழடழபல என்று அழைக்கப்படுகிறது. வர்மம் என்பது ஜீவநிலை அல்லது உயிர்நிலை சஞ்சரிக்கும் இடம் என்று குறிப்பிடப்படுகிறது. உடலில் 108 வர்மங்கள் காணப்படுகின்றது. அவற்றில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வர்மம் 12 எனவும், சாதாரண வர்மங்கள் 96 ஆகவும் காணப்படுகின்றன. அதாவது உடலிலுள்ள குறிப்பிட்ட 12 வர்மங்களில் தாக்கம் ஏற்பட்டால், குணப்படுத்த முடியாததாகவும், ஏனைய 96 வர்மங்களில் தாக்கம் ஏற்பட்டால், குறிப்பிட்ட முறையில் மருத்தெண்ணெய் பூசப்பபட்டு, அப்பியாசம் செய்து சீர் செய்யலாம் எனவும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கிடையில் செய்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்மத்தின் பிரிவுகள்:
தட்டு வர்மம் - 08
படு வர்மம் - 12
தொடு வர்மம் - 88
உடலின் 108 வர்ம ஸ்தானங்களும், அவை தாக்கப்பட்டால் ஏற்படும் குறிகுணங்களும், தாக்கப்பட்ட வர்மத்தை இளக்கும் முறைகளும், எவ்வளவு காலத்திற்குள் இளக்கப்பட வேண்டும், சாத்தியம், கஸ்ட சாத்தியம், அசாத்;தியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலிலுள்ள வர்ம ஸ்தானங்களைப் பார்க்குமிடத்து:
தட்டு வர்மம் - 08
பெரு மூளை வர்மம், நேம வர்மம், பொற்சைக்கால வர்மம், புய வர்மம், மைய வர்மம், மூச்சடக்கி வர்மம், மூத்திலகால வர்மம், கச்சை வர்மம்.
படு வர்மம் - 12
திலர்த்தவர்மம், நட்சத்திரவர்மம், செவிகுத்திவர்மம், உறக்காலவர்மம், தும்மிவர்மம், நேர் வர்மம், அடப்பகலவர்மம், உறுமிவர்மம், வலியஅத்திச் சுருக்கிவர்மம், சிறியஅத்திச் சுருக்கிவர்மம், கல்லடைக்காலவர்மம்,
தொடு வர்மம் - 88
மேல் சுளியாடிவர்மம், நடுவரிமத்திமவர்மம், நட்டெல்லுவர்மம், கீழ் சுளியாடிவர்மம், சுழற்சிவர்மம், முண்டெல்காலவர்மம், பள்ளைவர்மம், சுருக்கிகாலவர்மம், கொக்கிநரம்புவர்மம், விஷ சம்பவவர்மம், தாலிகவர்மம், அண்டக்காலவர்மம், உந்திவர்மம், தொப்பூழ் குழிகாலவர்மம், ஒட்டுவர்மம், லிங்கவர்மம், விரைவர்மம், விந்துவர்மம், காக்கட்டைகாலவர்மம், கைகொட்டிகாலவர்மம், சடபிறவர்மம், விலங்குவர்மம், சுளுக்குவர்மம், மொழிவர்மம், துதிக்கைவர்மம்,.........என இன்னும் பலகுறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து தோற்பிணி பற்றிய சிறப்பான சிகிச்சை முறைகள் சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தோலில் ஏற்படக் கூடிய சாதாரண நோய்நிலைமை முதல், பாரதூரமான தீவிர நோய்நிலைமைகள் பற்றி நோயின் காரணங்கள்(Causes), நோய் நிதானம்(Diagnosis), நோயின் உபத்திரவங்கள்(Complications), நோய்க்கான சிகிச்சைகள்(Treatments). நோய்க்கான பத்திய அபத்தியம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக: இப்பகுதியில், படைமுதல் காலாஞ்சிகப்படை வரை குறிப்பிடப்பட்டுள்ளது. புடை என்பது தேமல்- Herpes, படர்தாமரை–Ring worm infestation, Psoriasis, காளாஞ்சிகப்படை- Psoriasis,
தொழுநோய், பெருநோய்-Leprosy> வெண் குஸ்டம்- Leucoderma இன்னும் பல குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பகுதியில் சிறப்புச் சிகிச்சையுடைய நோய்நிலைமைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதே சித்தமருத்துவத்தின் சிறப்பாகும்.
செ.போல்ரன் றஜீவ்(B.S.M.S)
சித்தமருத்துவர்
<e-mail: drsrprajeev@gmail.com>
No comments:
Post a Comment