Thursday, May 8, 2014

உலக அளவில்... முதல்முறையாக... சூர்யா படத்திற்கு மட்டும்! ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா

உலக அளவில்... முதல்முறையாக... சூர்யா படத்திற்கு மட்டும்!

உலக அளவில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

சூர்யா - லிங்குசாமி இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், நவம்பர் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்காக டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஹாலிவுட்டில் கூட இதுவரை பயன்படுத்தாத ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமராவுடன், ஆன்ஜினியக்ஸ் லென்ஸ் வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவருக்குப் பிறகு ஹாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ரிட்லி, ஸ்காட் உள்ளிட்டவர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தப் புதிய முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'இந்த முயற்சி முதல்முறையாக சென்னையில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து துவங்கி இருக்கிறேன்' என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி, 'எனக்கு சூர்யாவுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 'வேட்டை' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை மிகவும் நிதானதமாகத் தயார் செய்திருக்கிறேன். தற்போது நிறைய இளைஞர்கள் வித்தியாசமான கதைகள் மூலமாக அசரடிக்கிறார்கள்.

அவர்களுடன் போட்டி போடும் வகையில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறேன். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், நாயகியாக சமந்தா, இசைக்கு யுவன், எடிட்டிங் ஆண்டனி என முன்னணி நபர்களை வைத்து படத்தினை உருவாக்க இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

'இந்தப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. சின்ன வயதில் 'தளபதி' படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவைப் பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவர் என்னுடைய படத்திற்கு உலக அளவில் இதுவரை யாருமே உபயோகிக்காத கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்வது சந்தோஷமாக இருக்கிறது' என்கிறார் சூர்யா.

அடுத்த வருடம் மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment