Sunday, May 4, 2014

விகடன் பொக்கிஷம் ஓவர் ஆக்‌ஷன்.. மெட்டுக்குப் பாட்டா..


"'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
"மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். 'புதிய பறவை'யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. 'நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்' என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, 'இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?' என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் 'எங்கே நிம்மதி'!".
கவிஞர் வைரமுத்து (4.2.90)

No comments:

Post a Comment