Park Chan-wook, இவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு மேற்கொண்டு எதுவும்
சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல்,
தாறுமாறா படங்களை எடுத்து அசத்திவிடுவார். கொரிய மெய்ன்ஸ் ஸ்ட்ரீம்
சினிமாவின் வெற்றி இயக்குனர். ஆனால், பல விருதுகளையும் வென்று
குவித்துள்ளார். இந்த Thirst திரைப்படம் Cannes இல் ஜுரி அவார்டையும்
வாங்கியிருக்கின்றது.
கதை 18 ப்ளஸ். அதனால் விரிவாக எழுத முடியாது. மனிதாபிமானமிக்க பாதிரியாக Song Kang-ho (சாங் காங்-ஹோ அப்படியா வரும்?) நடித்துள்ளார். உலகில் நடிப்பு “பைத்தியக்கார சைக்கோக்கள்” என்று ஒரு பட்டியலைப் போட்டால் இந்த ஆள் பெயரும் கண்டிப்பா இடம்பிடிக்கும். இவருக்கும் தே-ஜு (Ok-bin Kim) இற்கும் இடையிலான அதி பயங்கர பைத்தியக்கார காதலை சொல்லும் படம்தான் இந்த Thirst.
Thirst, நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்ளும் பாதிரி சாங் ஹுயூன் (Song Kang-ho), ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் இரத்த மாற்று (Blood Transfusion) க்கு உட்படுத்தப்படுகிறார். இந்த இரத்தம் ஒரு வெம்பயருடைய இரத்தம்.
Thirst, Vampire களுக்கு இருக்கும் மூத்தாகங்கள் (காமம், கொலை, இரத்தம்) இவரை கொஞ்ச கொஞ்சமாக ஆக்கிரமிக்கிறது. கொலையை கன்ட்ரோல் பண்ணிக் கொள்கிறார். மற்ற இரண்டையும் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை. அதே நேரம் இவர் ஒரு பாதிரி. இது இன்னமும் சிக்கலாகிறது.
தே-ஜு உடனான காதல் அவளையும் ஒரு சந்தர்ப்பத்தில் வெம்பயராக மாற்றும் நிலைக்கு உள்ளாகிறார் சாங் ஹுயூன்.
இதற்கு மேல் உள்ள கதை, முடிவு எல்லாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Alternate Vampire படங்களில் இந்தப் படம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
“Alternate Vampire” என்றால், வழக்கமான வகையில் இருந்து வேறுபட்டு, கொஞ்சம் சைகலாஜி, த்ரில்லர், மர்மம் எல்லாம் போட்டு மிக்ஸ் பண்ணி “உலகத் தரத்தில்” எடுக்கப்படுவது.

No comments:
Post a Comment