Saturday, April 12, 2014

இலந்தை :

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.அ‌வ்வளவு‌சி‌ன்ன பழமாக இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் அட‌ங்‌கி‌ய்ளள ‌வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ஏராள‌ம்.

100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.
இது உடலு‌க்கு சூ‌ட்டை த‌ணி‌த்து கு‌ளி‌ர்‌ச்‌சியை‌‌த் தர‌க் கூடியது. கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் வாகு கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌திய வேளை‌யி‌ல் ம‌ட்டு‌ம் இதனை உ‌ண்ணலா‌ம்.
பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன.

இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.

”பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்.”

- அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.

-நன்றி மூலிகைகள் வலைப்பக்கம்.
Photo: இலந்தை :

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.அ‌வ்வளவு ‌சி‌ன்ன பழமாக இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் அட‌ங்‌கி‌ய்ளள ‌வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ஏராள‌ம். 

No comments:

Post a Comment